×

அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன், ஆணவப் போக்குடன் அவமதிப்பு: ராகுல்காந்தி கண்டனம்

டெல்லி: ஜி.எஸ்.டி. வரி பற்றி கேள்வி எழுப்பிய அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன், ஆணவப் போக்குடன் அவமதிக்கப்பட்டதற்கு ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். கோடீஸ்வர நண்பர்களுக்காக விதிகளை மாற்றி சிவப்பு கம்பளம் விரிக்கிறது மோடி அரசு. பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள சிறு வணிகர்கள் கேள்வி எழுப்பினால் அவமதிக்கிறார்கள். வரிவிதிப்பில் மாற்றம் செய்ய வேண்டும் என சிறு, குறு தொழில்துறையினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், மோடி அரசு ஆணவப் போக்குடன் சிறு வணிகர்கள் கோரிக்கையை ஏற்க மறுப்பதாக ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்தார்.

The post அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன், ஆணவப் போக்குடன் அவமதிப்பு: ராகுல்காந்தி கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Annapurna ,Sineevasan ,Rakulganti ,Delhi ,G. S. D. ,Sinivasan ,Modi government ,G. S. D. Small ,Dinakaran ,
× RELATED நாடாளுமன்ற வளாகத்தில் மோடி, அதானி...