- வட கிழக்கு பருவமழை
- தோட்டப்பேட்டை
- இடுஹாட்டி
- வட கிழக்கு பருவமழை
- தோட்டப்பேட்டா
- இடுஹட்டி
- கடப்பேட்டு
- நீலகிரி மாவட்டம்
- தோடப்பேட்டை
- தின மலர்
ஊட்டி : வடகிழக்கு பருவமழை நெருங்கிய நிலையில்,தொட்டபெட்டா, இடுஹட்டி, கட்டபெட்டு சாலை சீரமைப்பு, மழைநீர் கால்வாய் அமைத்தல், சிறு பாலங்கள் தூர் வாரும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் துவங்கி இரு மாதங்கள் வரை தென்மேற்கு பருவமழை பெய்யும். இச்சமயங்களில் நீலகிரி மாவட்டத்தில் கூடலூர்,பந்தலூர்,ஊட்டி மற்றும் குந்தா போன்ற பகுதிகளில் மழையின் தாக்கம் சற்று அதிகமாக காணப்படும்.
இப்பகுதிகளில் மரங்கள் விழுவது,மண் சரிவு ஏற்படுவது போன்ற பாதிப்புகள் ஏற்படும்.அதேசமயம் தென்மேற்கு பருவமழையின் போது,குன்னூர் மற்றும் கோத்தகிரி போன்ற பகுதிகளில் பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்படும். இந்தமழையின் தாக்கம் குன்னூர்,கோத்தகிரி மற்றும் ஊட்டி போன்ற பகுதிகளில் அதிகமாக காணப்படும். இந்நிலையில், வடகிழக்கு பருவமழை நெருங்கிய நிலையில்,தற்போது நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் சாலைகள் சீரமைப்பு, மழை நீர் கால்வாய்கள் அமைக்கும் பணிகள் நெடுஞ்சாலைத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஊட்டி கோட்டத்திற்குட்பட்ட தொட்டபெட்டா முதல் இடுஹட்டி, கட்டபெட்டு சாலையில், பல்வேறு பகுதிகளிலும் சாலையோரங்களில் மழை நீர் கால்வாய்கள் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும், இச்சாலையோரங்களில் உள்ள முட்புதர்கள் அகற்றப்பட்டுள்ளது.சிறு பாலங்கள், கல்வெட்டுகள் தூர் வாரும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், வடகிழக்கு பருவமழையின் போது, நீலகிரி மாவட்டத்தில் மழை பாதிப்புகள் அதிகமாக ஏற்படுவது வாடிக்கை.
எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சாலைகள் பழுதடையாமல் இருக்கவும், மண் சரிவு மற்றும் மண் அரிப்புகள் ஏற்படாமல் இருக்க தற்போது அனைத்து சாலைகளிலும் மழை நீர் கால்வாய் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், சிறிய பாலங்கள் மற்றும் பெரிய பாலங்கள் அனைத்திலும் தூர் வாரப்பட்டுள்ளது. இதனால், மழைக்காலங்களில் தண்ணீர் எளிதாக வழிந்தோடிவிடும்.பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பில்லை. இதுமட்டுமின்றி, சாலையோரங்களில் உள்ள முட்புதர்கள் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று கூறினர்.
The post வடகிழக்கு பருவமழை நெருங்குகிறது தொட்டபெட்டா – இடுஹட்டி சாலை சீரமைப்பு பணி தீவிரம் appeared first on Dinakaran.