- மஹா ஷண்டியாக்
- மஹா மாரியம்மன் கோயில்
- நீடாமங்கலம்
- சதுர்வேதம்
- விநாயகர்
- திருவாரூர்
- மங்கள் மகா சண்டி
- சந்தியாக் திருவிழா
- மகா சந்தியாக்
நீடாமங்கலம், ஆக.13: திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் சதுர்வேத விநாயகர், மகா மாரியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் உலக அமைதி வேண்டியும் வெப்பம் தணிந்து மழை வேண்டியும் மங்கள மகா சண்டியாக பெருவிழா நேற்று முன்தினம் நடந்தது. சண்டியாக பெருவிழாவை ஒட்டி மகா மாரியம்மன் கோயிலில் காலை கோபூஜை, விக்னேஸ்வர பூஜை, கணபதி மூலமந்திரம், பூர்ணாகதி தீபாரதனை நடந்தது.
இதனைத்தொடர்ந்து மாலை விக்னேஸ்வர பூஜை, தேவி மகாத்மிய பாரானம் நவாவரனபூஜை, நவாஷரி யாகம் செய்து மகாதீபாரதனை நடந்தது. நேற்று நவாவரண பூஜை 13 அத்தியாயத்திற்குரிய தேவதை மகா மங்கள திரவியங்கள், கடம் புறப்பாடு அம்மனுக்கு அபிஷேக ஆராதனையும் நடந்தது. நிகழ்ச்சியில் சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் முழங்க சண்டியாகம் நடைபெற்று பிரசாதம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோயில் தக்கார் ரமேஷ், ஆய்வாளர் ராசி, செயல் அலுவலர் ராஜேஸ்வரி மற்றும் நீடாமங்கலம் நகரமக்கள் செய்திருந்தனர்.
The post உலக அமைதி வேண்டி மகா மாரியம்மன் கோயிலில் மகா சண்டியாகம் appeared first on Dinakaran.