- வேலூர்
- டிஐஜி
- புழல்
- சிறையில்
- தாய்லாந்து உயர் நீதிமன்றம்
- சிவகுமாரின்
- கிருஷ்ணகிரி
- வேலூர் சிறை
- வேலூர் சரக்கு துறை
- புஷால் ஜெயில்
வேலூர்: வேலூர் சிறையில் கிருஷ்ணகிரியை சேர்ந்த ஆயுள் தண்டனை கைதி இருந்த சிவக்குமார் (30) என்பவரை வேலூர் சரக சிறை துறை டிஐஜி வீட்டில் வேலைக்கு பணியமர்த்தப்பட்ட போது பணம், நகைகளை திருடியதாக தாக்கிய சித்ரவதை செய்யப்பட்டதாக தாய் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து, ஐகோர்ட்டில் உத்தரவுப்படி டிஐஜி ராஜலட்சுமி, கூடுதல் எஸ்.பி அப்துல்ரகுமான், ஜெயிலர் அருள்முருகன் உள்பட 14 பேர் மீது சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கடந்த 2 நாட்களாக சேலம் மத்திய சிறையில் கைதி சிவக்குமாரிடமும், வேலூர் மத்திய சிறையில் டிஐஜி உள்ளிட்ட அதிகரிகளிடமும் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில், வேலூர் சரக சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். சென்னை சரக சிறைத்துறை டிஐஜி முருகேசனுக்கு வேலூர் சரக சிறைத்துறை டிஐஜியாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல், வேலூர் மத்திய சிறை கூடுதல் எஸ்.பி. அப்துல்ரகுமான் சென்னை புழல் 2 சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். புழல் 2 சிறையில் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த பரசுராமன், வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். புழல் 1 ஜெயில் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜிக்கு புழல் 2, புழல் 3 என கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள 12 பேரின் மீது துறை ரீதியான நடவடிக்கை ஓரிரு நாட்களில் எடுக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்ட டிஐஜி ராஜலட்சுமி, கூடுதல் எஸ்.பி அப்துல்ரகுமான், ஜெயிலர் உள்ளிட்ட 14 பேரையும் சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி விசாரணைக்கு நேரில் ஆஜராக அழைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சூழலில் தமிழ்நாடு சிறைத்துறை டிஜிபி மகேஷ்வர்தயாள் நேற்று வேலூர் சிறையில் திடீரென ஆய்வு செய்து, கைதிகளிடம் விசாரணை நடத்தினார்.
The post சிறை கைதியை வீட்டு வேலை செய்ய வைத்து தாக்கி சித்ரவதை வேலூர் டிஐஜி காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்: கூடுதல் எஸ்.பி புழல் சிறைக்கு டிரான்ஸ்பர் appeared first on Dinakaran.