- வில்சன்
- சென்னை
- ராஜ்ய சபா
- மத்திய கல்வி அமைச்சர்
- ராஜேந்திரபிரதான்
- யூனியன் ஐ.ஐ.டி
- காந்தி
- நகர்
- ஐஐடி
- AIOPCSA
- ஜனாதிபதி
- கிரண்குமார்
- தின மலர்
சென்னை: ராஜ்யசபா எம்பி வில்சன், ஒன்றிய கல்வி அமைச்சர் ராஜேந்திரபிரதான், மற்றும் ஒன்றிய ஐஐடி கவுன்சலின் உறுப்பினர்களுக்கும் அனுப்பியுள்ள அறிக்கை: தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு செய்து கேட்கப்பட்டதில், காந்தி நகர் ஐஐடியின் ஏஐஓபிசிஎஸ்ஏவின் தலைவர் கிரண்குமார் தெரிவித்துள்ள தகவல்களின் அடிப்படையில் பார்க்கும் போது, காந்திநகர் ஐஐடியில் ஆசிரியர் நியமனங்களில் அரசியலமைப்பு இடஒதுக்கீட்டு விதிகள் மீறப்பட்டுள்ளது ஆர்டிஐ மூலம் பெறப்பட்ட தகவலின் மூலம் தெரியப்படுத்தியுள்ளார்.
அந்த ஐஐடியில் மொத்த ஆசிரியர்களின் பணியிடங்களின் எண்ணிக்கை 190 உள்ளன. பொதுப் பிரிவைச் சேர்ந்த 116 பேர், ஓபிசி பிரிவைச் சேர்ந்த 8 பேர், எஸ்சி பிரிவைச் சேர்ந்த 7 பேர், எஸ்டி பிரிவைச் சேர்ந்த 4 பேர் என 135 பேர் தற்போது ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகின்றனர். மீதம் இடங்கள் உள்ளன. இந்த நியமனங்களின்படி பார்த்தால் 190 இடங்களில் 135 இடங்கள் தான் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இது அரசியலமைப்பு படி இடஒதுக்கீடுகளை பின்பற்றுவதை மீறப்பட்டுள்ளது.
ஐஐடி கவுன்சிலின் தலைவராக, உள்ள தர்மேந்திர பிரதான், இதுகுறித்து ஆய்வு செய்து, ஒதுக்கப்பட்ட பிரிவினருக்கான இடஒதுக்கீடுகளை அவ்வப்போது மறுபரிசீலனை செய்வதும், அந்த நியமனங்களில் ஏதாவது பாரபட்சம் இருந்தால் அந்தந்த ஐஐடிகளின் இயக்குநர்களை பொறுப்பாக வைத்து அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கையைத் எடுக்க வேண்டும்.
இந்த கவுன்சிலின் தலைவராக உள்ள அமைச்சர் தர்மேந்திர பிரதான், டாக்டர் வீரேந்திர குமார் மற்றும் அர்ஜுன்ராம்மேக்வால் ஆகியோர், எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீடுகள் மறுக்கப்பட்டு இருந்தால், அந்த செயல் இந்த சமூகத்தினருக்கு எதிரான அட்டூழியங்களாக கருதும் அந்தந்த சட்டங்களில் திருத்தங்களை முன்மொழிவது, சம்பந்தப்பட்ட துறைத்தலைவர்களுக்கு தண்டனை உள்பட அனைத்து நடவடிக்களையும் மேற்கொள்ள வேண்டும். இந்த நடவடிக்கைகள் தான் விளிம்புநிலை சமூகங்களை பிரதான நீரோட்டத்திற்கு கொண்டு வருவதற்கும், சமூக நீதியை அனைத்து மட்டங்களிலும் செயல்படுத்துவதற்கும் ஒரே வழியாக இருக்கும்.
The post ஐஐடியில் இடஒதுக்கீடு விதிகள் மீறல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: எம்பி வில்சன் கோரிக்கை appeared first on Dinakaran.