×

காலபைரவருக்கு வெள்ளிக்கவசம்

ராசிபுரம், செப்.13: நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற கைலாசநாதர் தர்ம சம்வர்த்தினி கோயில் வளாகத்தில் உள்ள காலபைரவர் சன்னதியில், உலக நன்மை வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும் சிறப்பு பூஜை நடைபெற்றது. நிகழ்ச்சியில் பால், தயிர், மஞ்சள், சந்தனம், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், பன்னீர் போன்ற வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டது. தொடர்ந்து 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து, 11 கிலோ வெள்ளிக் கவசம் சாத்தப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து கோயில் வளாகத்தில் வலம் வந்து சுவாமி அருள்பாலித்தார். இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

The post காலபைரவருக்கு வெள்ளிக்கவசம் appeared first on Dinakaran.

Tags : Kalabhairava ,Rasipuram ,Kailasanathar Dharma Samvarthini Temple ,Rasipuram, Namakkal district ,Kalabhairavaram ,
× RELATED காலபைரவர் கோயிலில் தெப்ப உற்சவம்