சென்னை: தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை வரும் 30ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் 102 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் 311 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் 2024-2025ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 31ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது. தற்போது வரும் 30ம் தேதி வரை மேலும் அவகாசம் நீட்டிக்கப்படுகிறது.
இந்த அரிய வாய்ப்பை நன்கு பயன்படுத்தி மாணவர்கள் தாம் விரும்பும் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரலாம். அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவர்களுக்கு பயிற்சிக் கட்டணம் இல்லை. கல்வி உதவித்தொகையாக மாதம் ரூ.750 வழங்கப்படும். தமிழக அரசு வழங்கும் விலையில்லா மிதிவண்டி, விலையில்லா சீருடை, விலையில்லா சூஸ்கள், விலையில்லா பயிற்சிக்கான கருவிகள், கட்டணமில்லா பேருந்து வசதி இவை அனைத்தும் வழங்கப்படும்.
The post ஐடிஐகளில் சேர 30ம் தேதி வரை அவகாசம்: அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.