- திமுக
- சென்னை
- அமைச்சர்கள்
- ஏ வி. வேலு
- சுப்பிரமணியன்
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- அண்ணா
- பெரியார்
- AV
- வேலு
- கௌரவ
* முதல்வர் மு.க.ஸ்டாலின் விருதுகளை வழங்கி சிறப்புரையாற்றுகிறார்
சென்னை: சென்னையில் வரும் 17ம் தேதி நடைபெறும் முப்பெரும் விழாவில் திமுகவின் சாதனைகள் குறித்த கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திமுக சார்பில் ஒவ்வொரு ஆண்டும் அண்ணா பிறந்த நாள், பெரியார் பிறந்த நாள், திமுக தொடக்க நாள் ஆகிய முப்பெரும் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு திமுக முப்பெரும் விழா சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ திடலில் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு கூடுதல் சிறப்பாக திமுகவின் 75வது ஆண்டு பவள விழா என்பதால் முப்பெரும் விழா கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.
இதையொட்டி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் பவள விழா ஆண்டை குறிக்கும் விதத்தில் 75 ஆயிரம் பேர் அமரும் வகையில் இருக்கைகள் பிரமாண்ட அளவில் போடப்பட உள்ளன. 1 லட்சம் பேர் பங்கேற்கும் வகையில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைவரும் நிகழ்ச்சியை கண்டுகளிக்கும் வகையில் பிரமாண்ட எல்இடி டிஜிட்டல் திரைகள் அமைக்கப்பட உள்ளன. மேலும் விழா அரங்கில் திமுக அரசின் சாதனைகள் குறித்து கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விழாவுக்கு திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமை வகிக்கிறார். திமுக தலைவர், முதல்வர் மு.க.ஸ்டாலின் விருது மற்றும் பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றுகிறார். ஒன்றியம், நகரம் பகுதி, பேரூர் அளவில் சிறப்பாக செயல்படும் நபர் ஒருவருக்கு நற்சான்று, பணமுடிப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார். திமுக முப்பெரும் விழாவிற்கு இன்னும் குறுகிய நாட்களே உள்ளதால், விழாவிற்கான ஏற்பாட்டு பணிகளை திமுகவினர் மும்முரமாக செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் விழா ஏற்பாடுகளை சென்னை நந்தனம் மைதானத்துக்கு நேரில் சென்று அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து மாநாட்டில் செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்தும் நிர்வாகிகளிடம் விளக்கி கூறினார். மாநாட்டு பணிகளை துரிதப்படுத்தினார். இந்த ஆய்வின் போது அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
The post சென்னையில் 17ம் தேதி நடைபெறும் முப்பெரும் விழாவில் திமுகவின் சாதனைகள் குறித்த கண்காட்சி: நந்தனம் மைதானத்தில் அமைச்சர்கள் எ.வ.வேலு, மா. சுப்பிரமணியன் நேரில் ஆய்வு appeared first on Dinakaran.