×
Saravana Stores

வங்கதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவுக்கு உடல்நலக்குறைவு

டாக்கா: வங்கதேச முன்னாள் பிரதமர் பேகம் கலிதா ஜியா உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வங்கதேச தேசிய கட்சியின் தலைவர் பேகம் கலிதா ஜியா(79). முன்னாள் பிரதமர். இவரை ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் அரசு, கடந்த 5 ஆண்டுகளாக வீட்டு சிறையில் அடைத்தது. இதனால் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இந்த நிலையில் வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டம் காரணமாக ஷேக் ஹசீனா பதவி விலக, பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்துள்ளது. யூனுஸ் அரசு பேகம் கலிதா ஜியாவை கடந்த ஆகஸ்ட் 6ம் தேதி வீட்டு சிறையில் இருந்து விடுவித்து உத்தரவிட்டது. இந்நிலையில் பேகம் கலிதா ஜியாவுக்கு நேற்று அதிகாலை 1.40 மணிக்கு திடீரென்று உடல்நல குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

The post வங்கதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவுக்கு உடல்நலக்குறைவு appeared first on Dinakaran.

Tags : Former ,Bangladesh ,Khaleda Zia ,Dhaka ,Begum Khaleda Zia ,Bangladesh National Party ,Awami League government ,Sheikh Hasina ,Dinakaran ,
× RELATED வங்கதேச படுகொலைகள் 10 மாஜி அமைச்சர்களுக்கு கோர்ட் சம்மன்