×

மும்பை மருத்துவமனையில் லாலுவுக்கு இதய சிகிச்சை

மும்பை: பீகார் முன்னாள் முதல்வரும் ஆர்ஜேடி தலைவருமான லாலு பிரசாத் யாதவுக்கு மும்பையில் உள்ள ஏஷியன் இதய சிகிச்சை மையத்தில் கடந்த 2014ல் பெருந்தமனி வால்வு மாற்று அறுவை சிகிச்சை நடந்தது. 2022 ம் ஆண்டில், சிங்கப்பூர் மருத்துவமனையில் அவர் சீறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இந்த நிலையில், மும்பையில் உள்ள ஏஷியன் இதய சிகிச்சை மையத்தில் நேற்று லாலு பிரசாத் மீண்டும் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி என்னும் இதயத்தில் ரத்த ஓட்டத்தை சீராக்கும் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

The post மும்பை மருத்துவமனையில் லாலுவுக்கு இதய சிகிச்சை appeared first on Dinakaran.

Tags : Lalu ,Mumbai ,Bihar ,Chief Minister ,RJD ,Lalu Prasad Yadav ,Asian Cardiac Center ,Singapore ,Dinakaran ,
× RELATED ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட...