×
Saravana Stores

வருமான வரித்துறையால் கடன் பெற முடியாமல் டெல்டா விவசாயிகள் பாதிப்பு: ராமதாஸ் பேட்டி

திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: டெல்டா மாவட்டங்களில் பயிர் கடன் கிடைப்பது மிகுந்த சிரமமாக உள்ளது. கூட்டுறவு சங்கங்கள் ஒரு கோடி ரூபாய்க்கு கூடுதலாக பரிமாற்றம் செய்தால் அதற்கு 11 விழுக்காடு பிடித்தம் செய்திருக்க வேண்டும். அவ்வாறு ெசய்யத் தவறியதால் நூற்றுக்கணக்கான கூட்டுறவு சங்கங்களை வருமானவரித்துறை முடக்கி வைத்துள்ளது.

இதனால் சம்பா சாகுபடிக்கு கடன் கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளனர். வருமானவரித்துறையிடம் பேசி இந்த முடக்கத்தை நீக்க தமிழக அரசு முயற்சி செய்ய வேண்டும். தமிழகத்துக்கு ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ் நிதியை ஒதுக்க ஒன்றிய அரசு மறுத்தால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

 

The post வருமான வரித்துறையால் கடன் பெற முடியாமல் டெல்டா விவசாயிகள் பாதிப்பு: ராமதாஸ் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Income ,Ramadoss ,Tindivanam ,Dr. ,BAMA ,Thilapuram Estate ,delta ,
× RELATED பாஜ கூட்டணியில் இருந்து பாமக வெளியேறுகிறதா? ராமதாஸ் விளக்கம்