×

பழம்பெரும் நகைச்சுவை மலையாள நடிகர் மாமுக்கோயா காலமானார்.! அவரின் சிறிய வாழ்க்கை தொகுப்பு

திருவனந்தபுரம்: 450 க்கும் மேற்பட்ட மலையாள படங்களில் நடித்துள்ள பிரபல மலையாள நடிகர் மாமுக்கோயா (76 வயது) காலமானார். மலையாள சினிமாவில் பழம்பெரும் நகைச்சுவை நடிகர்களில் குறிப்பிடத்தக்கவர் மாமு கோயா. நாடக நடிகராக இருந்து கடந்த 1979ல் அன்யருடே பூமி என்ற படத்தில் அறிமுகமானார். அதன் பிறகு காந்திநகர் செகண்ட் ஸ்ட்ரீட், நாடோடிக்காற்று, பெருமழக்காலம், வடக்கு நோக்கி எந்திரம், பட்டனப்பிரவேசம், மழவில்காவடி உள்பட 450க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை, குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு மலப்புரம் மாவட்டம் காளிகாவு என்ற இடத்தில் ஒரு கால்பந்து போட்டியை தொடங்கி வைப்பதற்காக சென்றார். அப்போது திடீரென மாமு கோயாவுக்கு மயக்கம் ஏற்பட்டது. கீழே சாய்ந்தார். உடனே அவரை அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். டாக்டர்கள் பரிசோதித்தபோது மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டது தெரியவந்தது. உடனடியாக அவரை கோழிக்கோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு ஆபத்தான நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், பிரபல நடிகர் மாமுக்கோயா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மாமுக்கோயா பற்றி சில தகவல்கள்:

* மலையாள சினிமாவில் மட்டும் கிட்டத்தட்ட 450 படங்களுக்கு மேல் காமெடியனாகவும் குணச்சித்திர கேரக்டரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் புகழ்பெற்றவர்.

* 45 வருடங்களாக சினிமாவில் இவர் நடித்து வருகிறார். இவர் பேசும் மலபார் மொழி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம்.

* இவர் பிரபல நடிகர்களான மம்மூட்டி, மோகன்லால், ஜெயராம் உள்ளிட்ட பல கலைஞர்களுடன் இவர் நடித்துள்ளார்.

* இவர் நிறைய மலையாள படங்களில் டீக்கடை நடத்துபவராக நடித்துள்ளார். ஆனாலும் தன் நடிப்பால் ரசிகர்களை இவர் கவர்ந்திருந்தார்.

* இவரது மனைவி பெயர் சுகாரா. இந்த தம்பதியருக்கு நான்கு பிள்ளைகள் (Muhammed Nisar, Shahitha, Nadiya and Abdul Rasheed.) உள்ளனர்.

* முதலில் நாடகங்களில் நடித்து வந்த இவர் 1979 ஆம் ஆண்டு முதன்முறையாக சினிமாவில் நடிக்க தொடங்கினார்.

* காந்திநகர் செகண்ட் ஸ்ட்ரீட், மின்னல் முரளி, உஸ்தாத் ஹோட்டல், நாடோடி காற்று உள்ளிட்ட பல படங்கள் இவரது பெயரைச் சொல்லும்.

* கேரள அரசின் மாநில விருதை இரண்டு முறை (‘Perumazhakkalam’ – 2004, ‘Innathe Chintha Vishayam’ – 2008) இவர் பெற்றிருக்கிறார்.

* இவரது நடிப்பில் இறுதியாக வெளியான படம் ‘சுலைக்கா மஞ்சில்’. மேலும் இவரது நடிப்பில் (‘B Nilavarayum Sharjah Palliyum’ and ‘Nancy Rani’) கிட்டத்தட்ட 3-5படங்கள் தற்போது உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

The post பழம்பெரும் நகைச்சுவை மலையாள நடிகர் மாமுக்கோயா காலமானார்.! அவரின் சிறிய வாழ்க்கை தொகுப்பு appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Mamukkoya ,Thiruvananthapuram ,Mamu Goya ,Anyarude Bhoomi ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED கேரளாவில் ஓடும் ரயிலில் குமரி மாடல் அழகியிடம் அத்துமீறிய வாலிபர் கைது