×

48வது நினைவு தினம்: பெரியார் நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை

சென்னை: தந்தை பெரியாரின் 48வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி சென்னை பெரியார் திடலில் உள்ள அவரது நினைவிடத்தில் மதிமுக பொது செயலாளர் வைகோ மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அவருடன் துணை பொது செயலாளர் மல்லை சத்யா, மாவட்ட தலைவர் ஜீவன் உள்பட பலர் கலந்து கொண்டனர். காங்கிரஸ் சார்பில் முன்னாள் தலைவர்  ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பெரியார் நினைவிடத்தில்  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் மாவட்ட தலைவர்  எம்.பி.ரஞ்சன்குமார், முன்னாள் மாவட்ட தலைவர் ரங்கபாஷ்யம், வக்கீல் சுதா,  சூளை ராஜேந்திரன் உள்ளிட்ட ஏராளனமானோர் கலந்து கொண்டனர். மேலும் பெரியார் நினைவிடத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மலர்  வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இதில் திருப்போரூர் எம்எல்ஏ  எஸ்.எஸ்.பாலாஜி, உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலும் பெரியார் நினைவிடத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னதாக சென்னை அண்ணாசாலை சிம்சன் அருகே உள்ள பெரியார் சிலை அருகே வைக்கப்பட்டிருந்த திருவுருவப்படத்திற்கு கி.வீரமணி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதைதொடர்ந்து துணை தலைவர் கலி பூங்குன்றன் தலைமையில் மவுன ஊர்வலம் நடைபெற்றது. சிம்சன் அருகேயுள்ள பெரியார் சிலைக்கு திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் ஏராளமான நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்….

The post 48வது நினைவு தினம்: பெரியார் நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை appeared first on Dinakaran.

Tags : 48th Memorial Day ,Periyar Memorial ,Chennai ,Periyar ,Periyar Thital, Chennai ,Leaders ,
× RELATED திருவல்லிக்கேணி பகுதிகளில் பைக்கில்...