×

தியாகி இமானுவேல் சேகரனார் நினைவு நாள் ஒடுக்கப்பட்டோர் முன்னேற்றத்துக்காக உழைத்தவரை போற்றுவோம்: முதல்வர் பதிவு

சென்னை: தியாகி இமானுவேல் சேகரனார் நினைவு நாளை போற்றுவோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். தியாகி இமானுவேல் சேகரனார் நினைவு நாளையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று வெளியிட்ட சமூக வலைதளப் பதிவு: தீண்டாமையை ஒழிக்கவும் – சமூக விடுதலைக்காகவும் போராடிய தியாகி இமானுவேல் சேகரனாரின் நினைவு நாள் செப்டம்பர் 11. நாட்டுக்காகவும் ஒடுக்கப்பட்டோரின் முன்னேற்றத்துக்காகவும் உழைத்த அவரது வாழ்வைப் போற்றுவோம்! சமத்துவமும் – சமூகநல்லிணக்கமும் மிளிர்ந்த சமூகத்தை நோக்கிய நமது பயணத்துக்கு அவரது தொண்டு உரமாகட்டும்!

The post தியாகி இமானுவேல் சேகரனார் நினைவு நாள் ஒடுக்கப்பட்டோர் முன்னேற்றத்துக்காக உழைத்தவரை போற்றுவோம்: முதல்வர் பதிவு appeared first on Dinakaran.

Tags : Martyr Immanuel Sekarnar ,Chief Minister ,Chennai ,M.K.Stalin ,Tamil Nadu ,Chief Minister M.K. ,Stalin ,
× RELATED துணை முதலமைச்சர், புதிய அமைச்சர்களுக்கு முதலமைச்சர் வாழ்த்து