×
Saravana Stores

திருப்பூரில் நேற்று நடந்த விநாயகர் சிலை ஊர்வலத்தில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் காயம்: 5 பேர் கைது

திருப்பூர்: திருப்பூரில் நேற்று நடந்த விநாயகர் சிலை ஊர்வலத்தில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் காயம்; 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருப்பூர் மாநகரில் இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் நேற்று ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. குறிப்பாக திருப்பூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் இருந்து இந்த சிலைகள் அனைத்தும் ஊர்வலமாக வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டது. திருப்பூர் மாநகரின் முக்கிய பகுதிகளான டவுன்ஹால் வழியாக ஆலங்காடு பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு இந்த சிலைகள் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து நிதர்சனம் செய்ய கொண்டு செல்லப்படும்.

இந்த நிலையில் ஊர்வலம் எம் எஸ் நகர் 60 ரோடு பகுதிக்கு வந்த பொழுது இந்து முன்னணியினர் இரு தரப்பினரிடையே கைகலப்பு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதனால் அந்த இடமே போர்க்களம் போல் காட்சியளித்தது சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இரு தரப்பினரையும் விளக்கி தடுத்து நிறுத்தினர். மது போதையில் இந்த தகராறு நடந்ததாக கூறப்படுகிறது. தங்களது பகுதியைச் சேர்ந்த விநாயகர் தான் முன் செல்ல வேண்டும் என்பதில் இந்த தகராறு நடந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று நடந்த விநாயகர் சிலை ஊர்வலத்தில் ஏற்பட்ட மோதலில் சத்தியமூர்த்தி படுகாயமடைந்தார். இது தொடர்பாக நவீன்குமார், வெங்கடேஷ், தேவா, ஸ்ரீதர், பாலாஜியை ஆகிய 5 பேர் மீது வீரபாண்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர். மேலும், 5 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post திருப்பூரில் நேற்று நடந்த விநாயகர் சிலை ஊர்வலத்தில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் காயம்: 5 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Vinayagar statue ,Tiruppur ,Vinayagar ,statue ,Hindu ,Tiruppur Managar ,Dinakaran ,
× RELATED திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே டெம்போ வேன் கவிழ்ந்து 2 பேர் பலி!!