- அரசு மேல்நிலைப் பள்ளி
- சேயார்
- மாவட்ட பஞ்சாயத்து குழு
- வனுடையடாங்கி அரசு மேல்நிலைப்பள்ளி
- பார்வதி சீனிவாசன்
*மாவட்ட ஊராட்சி குழு தலைவர் வெற்றி கோப்பை வழங்கி பாராட்டு
செய்யாறு : செய்யாறு அருகே குறுவட்ட தடகள விளையாட்டுப் போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பெற்ற அழிவிடைதாங்கி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன் வெற்றி கோப்பையை நேற்று வழங்கி பாராட்டினார்.
தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை மற்றும் செய்யாறு கல்வி மாவட்டம் சார்பில் வெம்பாக்கம் குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டி பெருங்கட்டூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த வாரம் நடைபெற்றது. குறுவட்ட விளையாட்டுப் போட்டிகளை செய்யாறு எம்எல்ஏ ஒ.ஜோதி தொடங்கி வைத்தார்.
இந்த விளையாட்டு போட்டியில் கலந்து கொண்ட அழிவிடைதாங்கி அரசினர் மேல்நிலைப் பள்ளியின் சார்பில் கலந்து கொண்ட மாணவ மாணவிகள் கலந்துகொண்டு மாணவிகள் 162 புள்ளிகள் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் மற்றும் மூன்று தனிநபர் சாம்பியன்ஷிப் பட்டங்களை பெற்றனர்.
(மாணவிகள் அணி 2, 100மீ மற்றும் 200மீ, மாணவர்கள் அணி 1, நீளம் தாண்டுதல்). வெற்றிக் கோப்பை பெற்ற மாணவ மாணவிகளுக்கான பாராட்டு விழா நேற்று பள்ளி வளாகத்தில் நடந்தது நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் கே.சுமதி தலைமை தாங்கினார்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சி குழு தலைவர் எஸ்.பார்வதி சீனிவாசன் அவர்கள் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு வெற்றிக் கோப்பையை மாணவ மாணவியர்களுக்கு அளித்து சிறப்புரையாற்றினார்.
மேலும் திருவண்ணாமலை வருவாய் மாவட்ட அளவிலான நடை பெறுகின்ற தடகளப் போட்டிக்கு 25 மாணவர்கள் 15 மாணவிமர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து 150 மாணவ, மாணவிகளுக்கு ஜெர்சி மற்றும் 30 ஆசிரியர்களுக்கு ஜெர்சியையும் வழங்கினார்.
நிகழ்ச்சியில் வெம்பாக்கம் மத்திய ஒன்றிய செயலாளர் ஜெ.சி.கே.சீனிவாசன், பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் எம்.கே.ஆறுமுகம், மாவட்ட ஆதிதிராவிடர் அணி நலத் தலைவர் ஆர்.கருணாகரன், உடற் கல்வி ஆசிரியர்கள் மணிகண்டன், சேகர், ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
The post செய்யாறு அருகே அழிவிடைதாங்கி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ஒட்டுமொத்த சாம்பியன் appeared first on Dinakaran.