உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே திருச்சி நோக்கிச் சென்ற வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது இதில் 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். மேட்டத்தூர் ஜிஎஸ்டி சாலையில் முன்னால் சென்ற டேங்கர் லாரி மீது தனியார் சொகுசு பேருந்து மோதி விபத்துககுள்ளானது. பேருந்து மோதியதில் டேங்கர் லாரி சாலையை தாண்டி, எதிர்புறத்திற்கு சென்றது.
அப்போது எதிர்திசையில் வந்த மினி லாரி மீது டேங்கர் லாரி மோதியது. விபத்தில் சிக்கிய மினி லாரியின் பின்னால் வந்த தனியார் சொரும் பேருந்து அதன் மீது மோதாமல் இருக்க, ஓட்டுநர் சடன் பிரேக் அடித்து, இடதுபுறமாக திரும்பியபோது, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், 2 பேருந்துகள், 2 லாரிகளின் ஓட்டுநர்கள் மற்றும் இரண்டு பேருந்துகளில் வந்த 15க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து போலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த விபத்தால் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்த ஏற்பட்ட தொடர் விபத்துகளால், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பல கிலோமீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
The post உளுந்தூர்பேட்டை அருகே திருச்சி நோக்கிச் சென்ற வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து: 10க்கும் மேற்பட்டோர் காயம் appeared first on Dinakaran.