×
Saravana Stores

78 நிமிடம் இடைவிடாது சிலம்பம் சுற்றி அசத்திய வீரர்கள்

 

கூடலூர், செப்.11: நேஷனல் சிலம்பம் ஸ்கூல் பெடரேஷன் ஆப் இந்தியா, தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் டெவலப்மென்ட் பெடரேஷன் ஆகியவை இணைந்து நடத்திய ராயல் புக் ஆப் வேர்ல்ட் சாதனை சிலம்ப நிகழ்ச்சி குன்னூர் வெலிங்டன் மைதானத்தில் நடைபெற்றது.  மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆறு வயது முதல் 40 வயது வரை உள்ள 1200 சிலம்ப வீரர்கள் இதில் கலந்து கொண்டனர்.

78வது சுதந்திர தினத்தை ஒட்டி 78 நிமிடம் இடைவிடாது சிலம்பம் சுற்றும் இந்த சாதனை நிகழ்ச்சியில், நீலகிரி வேலாயுதம் சிலம்ப கலைக்கூடத்தின் சார்பில் 25 இளம் சிறுவர், சிறுமியர் பங்கு பெற்று 78 நிமிடம் இடைவிடாது சிலம்பம் சுற்றி அசத்தினர். போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் கோப்பைகள், மெடல்கள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. சாதனைப் போட்டியில் கலந்து கொண்டு சாதித்த இளம் சிலம்ப வீரர்களை ஊர் மக்கள் பாராட்டினர்.

The post 78 நிமிடம் இடைவிடாது சிலம்பம் சுற்றி அசத்திய வீரர்கள் appeared first on Dinakaran.

Tags : Cuddalore ,of World Record Silambam ,National Silambam School Federation of India ,Tamilnadu Sports Development Federation ,Coonoor Wellington Stadium ,
× RELATED திருவண்ணாமலை அருகே இன்று விபத்து;...