×

மளிகை கடையின் பூட்டை உடைத்து திருடியவர் கைது

 

பவானி, செப்.11: அம்மாபேட்டை அடுத்த ஊமாரெட்டியூர், சுந்தராம்பாளையத்தை சேர்ந்தவர் ஜீவா (34). அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். கடந்த ஜூலை மாதம் 3ம் தேதி, இவரது கடையின் பூட்டை உடைத்து புகுந்த மர்ம நபர், ரூ.26 ஆயிரம் பணம் மற்றும் மளிகை பொருட்களை திருடிச் சென்றார். இது குறித்த புகாரின் பேரில் அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், நெரிஞ்சிப்பேட்டை பேரேஜ் அருகே சந்தேகப்படும்படியாக நடமாடிக் கொண்டிருந்தவரை பிடித்த போலீசார் விசாரணையில், சேலம் மாவட்டம், சித்தூர், மூக்கரையனூரைச் சேர்ந்த விஜயகுமார் (35) என்பதும், ஊமாரெட்டியூரில் மளிகை கடையில் பூட்டை உடைத்து திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து, விஜயகுமாரை கைது செய்த போலீசார், பவானி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post மளிகை கடையின் பூட்டை உடைத்து திருடியவர் கைது appeared first on Dinakaran.

Tags : Bhavani ,Jeeva ,Umaretiur, Sundarampalayam ,Ammapet ,
× RELATED நாளை முதல் பவானி விற்பனை கூடத்தில் பாக்கு ஏலம்