×
Saravana Stores

சீலை அகற்றவில்லை என்று மெட்ராஸ் ரேஸ் கிளப் முறையீடு: உத்தரவு பிறப்பிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

சென்னை: அரசுக்கு வாடகை பாக்கி 730 கோடி ரூபாயை செலுத்தவில்லை என்பதால் சென்னை ரேஸ் கிளப்புக்கு சீல் வைக்கப்பட்டது. இதற்கு எதிராக ரேஸ் கிளப் நிர்வாகம் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகியது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், ராஜசேகர் ஆகியோர் அவகாசம் வழங்காமல் சீல் வைத்ததும் தவறான நடவடிக்கை. என்றனர்.

அப்போது, அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, நோட்டீஸ் அனுப்பி, பின் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இந்நிலையில், சீல் அகற்றப்படவில்லை என்று கிளப் நிர்வாகம் தரப்பில், நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் தலைமையிலான அமர்வில் நேற்று முறையிடப்பட்டது.

அப்போது, அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, கிளப்புக்கு செல்லும் மூன்று நுழைவாயில்களுக்கு வைக்கப்பட்ட சீல் அகற்றப்பட்டு விட்டதாக விளக்கம் அளித்தார். இதை தொடர்ந்து நீதிபதிகள், உத்தரவாதத்தை மீறியிருந்தால் அது சம்பந்தமாக தனியாக வழக்கு தொடரலாம். இப்போது வைத்துள்ள முறையீட்டின் அடிப்படையில் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்று தெரிவித்தனர்.

The post சீலை அகற்றவில்லை என்று மெட்ராஸ் ரேஸ் கிளப் முறையீடு: உத்தரவு பிறப்பிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு appeared first on Dinakaran.

Tags : Matras Race Club ,High Court ,Chennai ,Chennai Race Club ,RACE CLUB ,COURT ,S. S. Sundar ,Rajasekar ,Dinakaran ,
× RELATED போதைப்பொருள் விவகாரத்தில் திமுகவை...