×
Saravana Stores

அமெரிக்கா, சீனாவை விட ஆப்பிள் ஐபோன் 16 சீரிஸ் இந்தியாவில் விலை அதிகம்: செப்.13 முதல் முன்பதிவு; செப்.20ல் விநியோகம்

குபெர்டினோ: ஆப்பிள் நிறுவனம் 2007ம் ஆண்டு முதல் ஐபோன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வரிசையில் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள குபெர்டினோ நகரில் ஆப்பிள் ஐபோன் 16 சீரிஸ் போன்களை அந்நிறுவனத்தின் சிஇஓ டிம் குக் அறிமுகம் செய்தார். இந்த ஆப்பிள் ஐபோன் 16 வகை மாடலில் ஏஐ அம்சங்கள், கேமரா கன்ட்ரோல் பட்டன் போன்றவை இடம் பெற்றுள்ளன. பயனர்கள் சில டாஸ்குகளை எளிதில் மேற்கொள்ளும் வகையில் ஆக்‌ஷன் பட்டன் இதில் இடம்பெற்றுள்ளது.

ஐபோன் 16 செல்போன் 6.1 இன்ச் திரை அளவு கொண்டுள்ளது. ஐபோன் 16 பிளஸ் மாடல் 6.7 இன்ச் திரை அளவு கொண்டுள்ளது. ஏ18 ப்ராசஸர் இதில் இடம்பெற்றுள்ளது. ஐஓஎஸ் 18 இயங்குதளம். 48 மெகாபிக்சல் கொண்டுள்ளது பிரதான கேமரா. 12 மெகாபிக்சல் கொண்ட அல்ட்ரா வொய்ட் கேமராவும் பின்பக்கம் இடம்பெற்றுள்ளது. மேலும் 12 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா. டைப்-சி சார்ஜிங் போர்ட் உள்ளது. இந்தியாவில் ஐபோன் 16 (128ஜிபி) விலை ரூ.79,900. ஐபோன் 16 பிளஸ் விலை (128ஜிபி) ரூ.89,900.

ஐபோன் 16 புரோ போனின் ஆரம்ப விலை ரூ.1,19,900. ஐபோன் 16 புரோ மேக்ஸ் போனின் ஆரம்ப விலை ரூ.1,44,900. நாளை மறுநாள் முதல் புதிய ஐபோன் 16 வரிசை போன்களை இந்தியாவில் முன்பதிவு செய்யலாம். செப். 20ம் தேதி முதல் பயனர்கள் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் ஐபோன் 16 சீரிஸ் விலைகள் அமெரிக்கா, துபாய், கனடா உள்ளிட்ட நாடுகளை விட மிகவும் அதிகம். சீனாவில் ஐபோன் 16, ரூ.70,760க்கும், ஐபோன் 16 பிளஸ் ரூ.82,556க்கும், ஐபோன் 16 புரோ ரூ.94,351க்கும், ஐபோன் 16 புரோ மேக்ஸ் ரூ.1,17,942க்கும் விற்பனைக்கு வந்துள்ளது. இந்தியாவை விட இங்கிலாந்தில் ஐபோன் 16 சீரிஸ் விலை அதிகம்.

The post அமெரிக்கா, சீனாவை விட ஆப்பிள் ஐபோன் 16 சீரிஸ் இந்தியாவில் விலை அதிகம்: செப்.13 முதல் முன்பதிவு; செப்.20ல் விநியோகம் appeared first on Dinakaran.

Tags : Apple ,India ,US, China ,Cupertino ,CEO ,Tim Cook ,Cupertino, California, USA ,Apple… ,USA, China ,Dinakaran ,
× RELATED ஐபோன் 16 மாடல் செல்போனுக்கு தடை விதித்துள்ளது இந்தோனேசிய அரசு!