×

அரியானா தேர்தல் வினேஷ் போகத்தை எதிர்க்கும் பா.ஜ வேட்பாளர் அறிவிப்பு

சண்டிகர்: அரியானாவில் சட்டமன்ற தேர்தலில் வினேஷ் போகத்தை எதிர்த்து பாஜ சார்பில் முன்னாள் விமானப்படை கேப்டன் யோகேஷ் பைராகி நிறுத்தப்பட்டுள்ளார். அரியானாவில் மொத்தமுள்ள 90 சட்டமன்ற தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 5ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு காங்கிரஸ் மற்றும் ஆத் ஆத்மி இடையே நடந்த தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதனையடுத்து 20வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய முதல் பட்டியலை ஆம்ஆத்மி திங்களன்று வெளியிட்டது.

நேற்று இரண்டாவது வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் 9 பேரின் பெயர்கள் இடம்பெற்று இருந்தது. அதேபோல் பா.ஜவும் நேற்று 21 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டது. ஜூலானாவில் காங்கிரஸ் வேட்பாளரான வினேஷ் போகத்தை எதிர்த்து பாஜ சார்பில் முன்னாள் ஏர் இந்தியா விமானி கேப்டன் யோகேஷ் பைராகி போட்டியிடுகிறார். முதல்வர் நயாப் சிங் சைனி லட்வா தொகுதியில் போட்டியிடுகிறார்.

The post அரியானா தேர்தல் வினேஷ் போகத்தை எதிர்க்கும் பா.ஜ வேட்பாளர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : BJP ,Vinesh Bhogam ,Ariana elections ,Chandigarh ,Yogesh Bhairagi ,Vinesh Bhogat ,Haryana ,Congress ,Ariana ,Dinakaran ,
× RELATED பாஜ-அதிமுக கூட்டணி பற்றி கேட்காதீங்க…எச்.ராஜா அலறல்