×

ஓய்வை அறிவித்தார் ஹர்பஜன்: பயிற்சியாளராக மாற திட்டம்?

புதுடெல்லி: பஞ்சாப் மாநிலம் ஜலந்தரைச் சேர்ந்த சுழற் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்(41). இவர் 1998ம் ஆண்டு  பெங்களூரில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில்  இந்திய அணிக்    காக அறிமுகமானார். தொடர்ந்து அதே ஆண்டு ஷார்ஜாவில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்திலும், 2006ம் ஆண்டு ஜோகன்ஸ்பர்க்கில் நடந்த தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக டி20 ஆட்டத்திலும் விளையாடத் தொடங்கினார். சிறப்பாக பந்து வீசி சாதனைகள் படைத்த ஹர்பஜன் 2015ம் ஆண்டுக்கு பிறகு டெஸ்ட், ஒருநாள் போட்டிகளிலும், 2016க்கு பிறகு டி20 ஆட்டங்களிலும் விளையாட வில்லை. அதே நேரத்தில் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்று வந்தார். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வந்தவர், 2019, 2020ம் ஆண்டுகளில் சென்னை அணியில் இருந்தார். அதிலும் 2020ம் ஆண்டு கொரோனா பீதி காரணமாக போட்டியில் இருந்து விலகினார். தொடர்ந்து 2021ம் ஆண்டு கொல்கத்தா அணிக்கு தேர்வானார் . சரியாக வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் நேற்று ஹர்பஜன் சர்வதேச போட்டி உட்பட அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.   ஹர்பஜன்   பயிற்சியாளராக மாற திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதனை  ஐபிஎல் போட்டிகளில் இருந்து தொடங்க ஏதுவாகதான் ஹர்பஜன் இப்போது ஓய்வை அறிவித்துள்ளதாகவும் சொல்கிறார்கள்.விக்கெட்களை அள்ளிய ஹர்பஜன்இந்தியாவுக்காக அதிக டெஸ்ட் விக்கெட்களை வீழ்த்திய வீரர்களின் பட்டியலில் ஹர்பஜன் இப்போது 4வது இடத்தில் இருக்கிறார்.  அவர் 103 டெஸ்ட்களில் விளையாடி 417 விக்கெட்கள் அள்ளியுள்ளார். அவற்றில் 5 முறை தலா 10 விக்கெட்களும், 25முறை தலா 5 விக்கெட்களும் அறுவடை செய்துள்ளார். கூடவே 2 சதம், 9அரை சதங்களுடன்  2225ரன் விளாசி உள்ளார். மேலும் 236 ஒருநாள் ஆட்டங்களில் ஆடி 269விக்கெட்களும், 28 டி20 ஆட்டங்களில் விளையாடி 25 விக்கெட்களும்  எடுத்துள்ளார். ஐபிஎல் தொடரில்  163 ஆட்டங்களில் விளையாடி 150 விக்கெட் எடுத்திருக்கிறார். ரஞ்சி உள்ளிட்ட உள்ளூர் ஆட்டங்களில் டெஸ்ட்டில் 780, ஒருநாளில் 393, டி20யில் 235 விக்கெட்களை குவித்திருக்கிறார்.ஹர்பஜன் நன்றிஓய்வு முடிவு குறித்து ஹர்பஜன், ‘எல்லா நல்ல விஷயங்களும் முடிவுக்கு வருகின்றன. வாழ்க்கையில் எனக்கு எல்லாவற்றையும் கொடுத்த விளையாட்டில் இருந்து இன்று ஓய்வு பெறுகிறேன். இந்த 23 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையை அழகாகவும், மறக்க முடியாததாகவும் மாற்றிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி’ என்று டிவிட் செய்துள்ளார்.அறிவிப்புக்கு முன்பு உதவிஹர்பஜன் நேற்று மதியம் தனது ஓய்வு முடிவை டிவிட் செய்வதற்கு முன்பு இளம் தடகள வீராங்கனையான பிலிப்பைன்ஸ் சிறுமிக்கு உதவி செய்ய தயாராக இருப்பதாக  டிவிட் செய்தார். சில நாட்களுக்கு முன்பு பிலிப்பைன்சை சேர்ந்த ரேஹி புல்லோஸ்(11) என்ற சிறுமி ‘ஷூ’ இல்லாததால் கால்களில் டேப்பை சுற்றிக் கொண்டு ஓடியது வைரலாகியது….

The post ஓய்வை அறிவித்தார் ஹர்பஜன்: பயிற்சியாளராக மாற திட்டம்? appeared first on Dinakaran.

Tags : harbhajan ,New Delhi ,Harbhajan Singh ,Punjab ,State Jalandhar ,Bangalore ,Dinakaran ,
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு