- மதுரை
- திருச்சி
- அமைச்சர்
- மதுரியன்
- சென்னை
- வனப் பாதுகாப்புக்கான வனத்துறை
- மதுரை
- தலைமை வனவிலங்கு அதிகார
- கிண்டி-வேலச்சேரி
- மதுரை, திருச்சி
- மதுவாந்தன்
- தின மலர்
சென்னை: வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் தலைமையில் மதுரை மற்றும் திருச்சி மண்டலங்களில் வனப்பாதுகாப்பிற்காக வனத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் வளர்ச்சி பணிகள் முன்னேற்றம் குறித்து மண்டல அளவிலான ஆய்வுக்கூட்டம் கிண்டி – வேளச்சேரி முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்டு அமைச்சர் மா.மதிவேந்தன், துறை ரீதியாக நடைபெற்று வரும் பணிகளின் முன்னேற்றம் குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளை கேட்டறிந்தார். மாவட்ட வாரியாக நடைபெற்றுவரும் கோட்ட செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்து பணிகள் அனைத்தும் உரிய காலத்தில் துரிதமாக செய்து முடிக்க ஆலோசனைகள் வழங்கினார்.
மேலும், வன உயிரினங்களால் ஏற்படும் சேதங்களுக்கான இழப்பீட்டுத்தொகையை உரிய காலத்தில் வழங்க அறிவுரைகள் வழங்கினார். வனத்துறையால் மேற்கொள்ளப்பட்டுவரும் திட்டப்பணிகள் மற்றும் வளர்ச்சிப்பணிகள் நடைபெறுவதை உரிய முறையில் ஆய்வு செய்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அறிவுரைகள் வழங்கினார்.
இக்கூட்டத்தில் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் துறைத்தலைவர், சுதான்சு குப்தா, முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் (வனச்செயல்திட்டம்) விஜேந்திர சிங் மாலிக் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் வன உயிரினகாப்பாளர் ஸ்ரீனிவாஸ் ரா. ரெட்டி முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் (தமிழ்நாடு உயிர்பண்மை பாதுகாப்பு (ம) பசுமையாக்கல் திட்டம்) அன்வர்தீன் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் (புலிகள் திட்டம்) ராகேஷ்குமார் டோக்ரா, கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் (வனஉயிரினம்) நாகநாதன், மதுரை மண்டல தலைமை வனப்பாதுகாவலர் பத்மாவதி. திருச்சி மண்டல தலைமை வனப்பாதுகாவலர் என்.சதீஷ்குமார் மாவட்ட வன அலுவலர்கள் ஆனந்த சிவஜோதி, சமந்தா, ஜெகதீஸ்வாக்கன், தருண்குமார், பிரபா, எஸ்.கேமலதா, கிருத்திகா, அகில்தம்பி, எல்.சி.எஸ். ஸ்ரீகாந்த், கணேசலிங்கம், புவனேஸ் மற்றும் வனத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
The post அமைச்சர் மதிவேந்தன் தலைமையில் மதுரை, திருச்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் வளர்ச்சி பணிகள் முன்னேற்றம் குறித்த ஆய்வுக்கூட்டம் appeared first on Dinakaran.