- அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்கள்
- அரசாங்க செயலாளர்
- ராகவராவ்
- சென்னை
- தொழிலாளர் நலன்புரி மற்றும் திறன் அபிவிருத்தித் திணைக்களம்
- தொழிலாளர் நலன்புரி மற்றும் திறன் அபிவிருத்தி திணைக்களம்
- முதன்மை செயலாளர்
- ஆணையாளர்
- டாக்டர்
- அதுல் ஆனந்த்
- சென்னை,
- தேனம்பேட்டை
- தின மலர்
சென்னை: சென்னை, தேனாம்பேட்டை, தொழிலாளர் ஆணையரகத்தில் இன்று 10.09.2024 தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, அரசு செயலாளர் ராகவராவ் தலைமையில், முதன்மைச் செயலாளர் / தொழிலாளர் ஆணையர் முனைவர் அதுல் ஆனந்த் முன்னிலையில், அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களின் திறனாய்வுக் கூட்டம் நடைபெற்றது. தொழிலாளர் துறை நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 20 அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களில், தொழிலாளர்கள் பதிவு செய்து பல்வேறு நலத்திட்ட உதவிகள் பெற்று வருகின்றனர். தொழிலாளர்களுக்கு கல்வி, திருமணம், மகப்பேறு, கண்கண்ணாடி, இயற்கை மரணம், விபத்து மரணம் மற்றும் விபத்து ஊனம், மாதாந்திர ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.
18 வயது முதல் 60 வயது வரையிலான அமைப்புசாரா தொழிலாளர்கள், தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு மற்றும் நல வாரியத்தில் www.tnuwwb.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து பலன் பெற்று வருகின்றனர். தொழிலாளர்கள் அளிக்கும் மனுக்களை உடனடியாக பரிசீலனை செய்யவும் சிறு காரணங்களுக்காக மனுக்களை நிராகரித்து திருப்பி அனுப்பாமல் மனுதாரரை தொடர்பு கொண்டு விண்ணப்பத்தினை சரி செய்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்யுமாறும், தொழிலாளர்களுக்கு வீடு கட்டுவதற்கான நிதி உதவி வழங்கும் திட்டத்தில் பெறப்படும் மனுக்களை உடனுக்குடன் பரிசீலனை செய்து அவர்களுக்கு நிதி உதவி வழங்கிட விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதிக அளவில் வெளிமாநில கட்டுமானத் தொழிலாளர்களை இவ்வாரியத்தில் பதிவு செய்யுமாறும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, அரசு செயலாளர் அவர்கள் அறிவுறுத்தினார். தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரிய செயலாளர் (கூடுதல் பொறுப்பு) திருமதி.யாஸ்மின் பேகம் அவர்கள் வரவேற்றார். தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு நல வாரியச் செயலாளர் முனைவர். ஆ.திவ்வியநாதன் அவர்கள் நன்றி தெரிவித்தார். இக்கூட்டத்தில் அனைத்து கூடுதல் தொழிலாளர் ஆணையர்கள், தொழிலாளர் இணை ஆணையர்கள், தொழிலாளர் உதவி ஆணையர்கள் (சமூக பாதுகாப்புத் திட்டம்) மற்றும் தொழிலாளர் துறையின் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post அரசு செயலாளர் ராகவராவ் தலைமையில் அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களின் திறனாய்வுக் கூட்டம் appeared first on Dinakaran.