- விஷிகா
- அஇஅதிமுக
- அமைச்சர்
- எம் சுப்பிரமணியன்
- சென்னை
- தமிழ்நாடு சட்டமன்றம்
- விடுதலை புலிகள் கட்சி
- கள்ளக்குறிச்சி
- அதிமுக
- விஷிகி
- சுப்பிரமணியன்
சென்னை: தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகள் இருந்தாலும் இப்போதே கூட்டணிக்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மது ஒழிப்பு மாநாடு வரும் அக்டோபர் 2 ஆம் தேதி கள்ளக்குறிச்சியில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் அ.தி.மு.க.வும் பங்கேற்கலாம் என்றும், மக்கள் பிரச்சினைக்காக சாதிய, மதவாத சக்திகள் தவிர பிற எந்த சக்திகளோடும் இணைவோம் என்றும் வி.சி.க. தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். மது ஒழிப்பு மாநாட்டுக்கு அதிமுகவை அழைத்திருப்பதால் அரசியல் வட்டாரங்கள் பரபரத்துக் கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில், மது ஒழிப்பு மாநாட்டிற்கு அதிமுகவை, விசிக அழைத்திருப்பது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், “நல்ல விஷயத்திற்காக விசிக அழைத்துள்ளது. அந்த அழைப்பை ஏற்று அதிமுக சென்றால் நல்லதுதான். அவர்கள் ஒன்று சேர்ந்து மாநாடு நடத்துவதில் எந்த தவறும் இல்லை. மது ஒழிப்பு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளை அரசாங்கமும் செய்து கொண்டுதான் இருக்கிறது” என்று தெரிவித்தார்.
The post நல்ல விஷயத்திற்காக அதிமுகவை விசிக அழைத்துள்ளது: அந்த அழைப்பை ஏற்று அதிமுக சென்றால் நல்லதுதான்.! அமைச்சர் மா.சுப்பிரமணியன் appeared first on Dinakaran.