மும்பை: மகாராஷ்டிராவை சேர்ந்த பாஜக தலைவரின் மகன் கார் விபத்தில் சிக்கிய சம்பவத்தில், போதையில் இருந்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். மகாராஷ்டிரா மாநிலம் சிதாபுல்டி பகுதியில் வேகமாக சென்ற கார் ஒன்று, அவ்வழியாக பைக்கில் சென்ற 2 இளைஞர்கள் மோதி விபத்துக்குள்ளானது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இரண்டு இளைஞர்களையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்துக்கு காரணமான காரின் டிரைவர் மற்றும் மற்றொருவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘விபத்துக்கு காரணமான அர்ஜுன் ஹவேர், ரோனித் சிந்தன்வார் ஆகிய இரண்டு இளைஞர்களை கைது செய்துள்ளோம்.
இருவரும் குடிபோதையில் இருந்தனர். அவர்களது மருத்துவ அறிக்கை இன்னும் வரவில்லை. முதற்கட்ட விசாரணையில், விபத்தை ஏற்படுத்திய காரானது, மகாராஷ்டிர மாநில பாஜக மாநிலத் தலைவர் சந்திரசேகர் பவான்குலேவின் மகன் சங்கேத் என்பவருடையது என்பது தெரியவந்தது. அதனால் இதுகுறித்தும் விசாரித்து வருகிறோம்’ என்றனர். மேற்கண்ட சம்பவம் குறித்து சந்திரசேகர் பவான்குலே கூறுகையில், ‘விபத்தில் சிக்கிய கார் எனது மகன் பெயரில் உள்ளது. இந்த விபத்து குறித்து போலீசார் பாரபட்சமின்றி விசாரித்து, தவறு செய்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.
The post பைக்கில் சென்ற 2 இளைஞர்கள் மீது மோதி பாஜக தலைவரின் மகன் கார் விபத்தில் சிக்கியது: குடிபோதையில் இருந்த 2 பேர் கைது appeared first on Dinakaran.