×

கால்நடை விழிப்புணர்வு முகாம்

பள்ளிப்பட்டு: தமிழக அரசின் கால்நடை பராமரிப்பு துறை சார்பில், பள்ளிப்பட்டு ஒன்றியம் நெடுங்கல், ஆர்.கே.பேட்டை ஒன்றியம் சஹஸ்ரபத்மாபுரம் ஆகிய கிராமங்களில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நேற்று நடந்தன. இதில், திருத்தணி கோட்ட கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குநர் டாக்டர் எஸ்.தாமோதரன் தலைமை வகித்து முகாமை துவக்கி வைத்தார். ஊராட்சி மன்ற தலைவர்கள் குமார், அபிராமி ஆகியோர் வரவேற்றார். முகாமில் சுற்று வட்டார கிராமங்களிலிருந்து 385 கால்நடைகளுக்கு சிகிச்சை, 1025 கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம், 175 கால்நடைகளுக்கு தாது உப்பு கலவை உட்பட 2008 கால்நடைகளுக்கு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. முகாமில் கிடாரி கன்று பேரணி நடத்தி சிறந்த மூன்று கன்றுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், சிறந்த கால்நடை பராமரிப்பு விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டன. கால்நடை உதவி மருத்துவர்கள் முகுந்தன், சம்பூர்ணம், கால்நடை ஆய்வாளர்கள் உட்பட விவசாயிகள் கலந்துகொண்டனர்….

The post கால்நடை விழிப்புணர்வு முகாம் appeared first on Dinakaran.

Tags : Veterinary Awareness Camp ,Department of Animal Care ,Government of Tamil Nadu ,School Union Nadu ,R. K.K. ,Union Sahasrabadmapuram ,
× RELATED மாவட்டத்தில் நாளை மறுநாள் முதல்...