×

சர்ச்சைப் பேச்சு: மகாவிஷ்ணுவுக்கு மாற்றுத்திறனாளி ஆணையரகம் நோட்டீஸ்

சென்னை: சர்ச்சைப் பேச்சாளர் மகாவிஷ்ணுவுக்கு மாநில மாற்றுத்திறனாளிகள் ஆணையரகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பார்வையற்ற ஆசிரியரை அவமதிக்கும் வகையில் மகாவிஷ்ணு பேசிய விவகாரத்தில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. முன்ஜென்மத்தில் செய்த தவறுகளால்தான் மாற்றுத் திறனாளிகளாக, ஏழைகளாக பிறக்கிறார்கள் என பேசியதால் சர்ச்சை எழுந்தது. 25-ம் தேதிக்குள் விளக்கம் அளிக்குமாறு மாற்றத்திறனாளிகள் ஆணையரகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், பள்ளி தலைமை ஆசிரியர், சைதாப்பேட்டை காவல் ஆய்வாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

The post சர்ச்சைப் பேச்சு: மகாவிஷ்ணுவுக்கு மாற்றுத்திறனாளி ஆணையரகம் நோட்டீஸ் appeared first on Dinakaran.

Tags : Commission for Disabled Persons ,Mahavishnu ,Chennai ,State Commission for Persons with Disabilities ,
× RELATED மகிமைமிக்க மஹாசரஸ்வதி