×

சென்னையைச் சேர்ந்த 5 இளைஞர்கள் கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 5 பேரின் குடும்பத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். 5 இளைஞர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்:
சென்னை, எழும்பூர், நேருபூங்கா, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த 5 இளைஞர்கள், தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி பூண்டி மாதா கோவிலுக்கு சென்றுவிட்டு 8.9.2024 அன்று முற்பகல் திருச்சி-செங்கரையூர் கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தின் கிழக்குப் பகுதியில் குளிப்பதற்காக ஆற்றில் இறங்கியபோது, கிஷோர் (வயது 20) த/பெ. ஜியாவுதீன்; கலைவேந்தன் (வயது 19) த/பெ.சண்முகம்: ஆண்டோ (வயது 21) த/பெ.சார்லஸ்; பிராங்கிளின் (வயது 23) த/பெ.சார்லஸ்; மனோகர் (வயது 19) த/பெ.வெங்கடேசன் ஆகிய ஐந்து நபர்கள் எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

அவர்களது பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

The post சென்னையைச் சேர்ந்த 5 இளைஞர்கள் கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Klondi river ,Chief MLA ,K. Stalin ,Chief Minister MLA ,Kolindam River ,Chief Minister ,MLA ,Ulampur ,Nerupunga ,Klondi ,
× RELATED உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கித்...