×
Saravana Stores

குடிப்பழக்கத்தை கண்டித்த மனைவிக்கு கத்திக்குத்து

 

கிருஷ்ணகிரி, செப்.10: கிருஷ்ணகிரியில், குடிப்பழக்கத்தை கண்டித்த மனைவியை சரமாரியாக கத்தியால் குத்திய கணவரை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி ஜோதி விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மோகன் (32), கார் மெக்கானிக். இவரது மனைவி பவானி (27). இருவரும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். மோகனுக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனை பவானி கண்டித்துள்ளார். இதனால் கணவன், மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதேபோல், கடந்த 7ம் தேதி இரவு, மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

தகராறு முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த மோகன், அங்கிருந்த கத்தியை எடுத்து பவானியை சரமாரியாக குத்தினார். இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி அவர் அளித்த புகாரின் பேரில், டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து, மோகனை நேற்று முன்தினம் கைது செய்தனர். பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கிருஷ்ணகிரி கிளை சிறையில் அடைத்தனர்.

The post குடிப்பழக்கத்தை கண்டித்த மனைவிக்கு கத்திக்குத்து appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Mohan ,Krishnagiri Jyoti Vinayakar Koil Street ,Bhavani ,
× RELATED ஓசூரில் தனியார் பள்ளி மாணவியை...