×
Saravana Stores

திருச்சி, தூத்துக்குடி உள்ளிட்ட 21 நகரங்களில் காற்றின் மாசுபாடு குறைவு: ஆய்வில் தகவல்

சென்னை: இந்தியாவில் உள்ள 131 நகரங்களில் காற்று மாசு அடைந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்தது. இதையடுத்து காற்று மாசை குறைக்கும் வகையில் ஒன்றிய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகவே திருச்சி, தூத்துக்குடி உள்ளிட்ட 21 நகரங்களில் காற்று மாசுபாடு குறைந்துள்ளது. 2017- 18ம் ஆண்டை விட 2023-24ம் ஆண்டில் 40 சதவீதத்திற்கும் (பிஎம் 10 அளவு) அதிகமான காற்று மாசுபாடு குறைந்துள்ளது.

இருப்பினும் பெரும்பான்மையான நகரங்களில் ஓரளவு காற்று மாசு குறைந்துள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் திருச்சி, தூத்துக்குடி மற்றும் கடப்பா (ஆந்திரப் பிரதேசம்) ஆகிய 18 நகரங்கள் தூய்மையான நகரங்களின் தரத்தை பூர்த்தி செய்யும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.  மாசடைந்துள்ள 131 நகரங்களில் 95 நகரங்கள் வெவ்வேறு சதவீதத்தில் காற்று மாசு குறைந்துள்ளது. அவற்றில் 18 நகரங்கள் காற்று மாசுபாடு முழுமையாக குறைந்துள்ளது.

The post திருச்சி, தூத்துக்குடி உள்ளிட்ட 21 நகரங்களில் காற்றின் மாசுபாடு குறைவு: ஆய்வில் தகவல் appeared first on Dinakaran.

Tags : Trichy, Thoothukudi ,CHENNAI ,India ,Union Government ,Trichy ,Thoothukudi ,
× RELATED ஏர் இந்தியா விமானத்தில் இயந்திர கோளாறு