×
Saravana Stores

வீடு, அடுக்குமாடி குடியிருப்பு முன்பு நோ-பார்க்கிங் போர்டு வைக்க கூடாது: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: உயர்நீதிமன்றத்தில் நந்தகுமார் என்பவர் தாக்கல் செய்த மனுவில், ‘சென்னையில் வீடு, அடுக்குமாடி குடியிருப்புகள் முன்பு நோ பார்க்கிங் பதாகைகள் எவ்வித அனுமதியும் இன்றி வைக்கப்பட்டுள்ளன’ என கூறியிருந்தார். இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், பி.பி.பாலாஜி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ் ஆஜராகி சட்டவிரோதமாக வைக்கப்பட்டுள்ள நோ பார்கிங் போர்ட், பேரிகார்ட் மற்றும் விளம்பரப்பலகை ஆகியவற்றை அகற்றமாறு உத்தரவிட்டுள்ளோம் என்று தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நோ-பார்க்கிங் பதாகைகள் மற்றும் பேரிகார்ட் ஆகியவற்றை விதிகளுக்கு முரணாக வைக்கக் கூடாது என்று காவல் துறையின் இணையதளத்தில் 2 வாரங்களுக்குள் தெரிவிக்க வேண்டும். பத்திரிக்கைகள், தொலைக்காட்சிகளில் வெளியிட வேண்டும், மீறினால் தவறு செய்பவர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

The post வீடு, அடுக்குமாடி குடியிருப்பு முன்பு நோ-பார்க்கிங் போர்டு வைக்க கூடாது: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Nandakumar ,Chief Justice ,T.Krishnakumar ,PP Balaji ,Dinakaran ,
× RELATED எம்பி., எம்எல்ஏ.க்களுக்கு எதிரான கொலை,...