- ராகுல் காந்தி
- பாஜக
- புது தில்லி
- முன்னாள்
- காங்கிரஸ்
- ஜனாதிபதி
- எங்களுக்கு
- ஆர்எஸ்எஸ்
- டெக்சாஸ் பல்கலைக்கழகம்
- தின மலர்
புதுடெல்லி: ‘இந்திய ஜனநாயகத்தில் ராகுல் காந்தி ஒரு கரும்புள்ளி’ என பாஜ கடுமையாக விமர் சித்துள்ளது. அமெரிக்கா சென்றுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, டெக்சாஸ் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் உரையாடிய போது, பாஜ, ஆர்எஸ்எஸ்சை விமர்சித்து பேசினார். இது குறித்து டெல்லியில் பாஜ தேசிய செய்தித் தொடர்பாளர் கவுரவ் பாட்டியாவிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு அவர், ‘‘ராகுல் காந்தி முதிர்ச்சியற்ற, பகுதி நேர தலைவர் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் மக்களவையில் எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பேற்றதில் இருந்து அவரது தோளில் மக்கள் பெரும் சுமையை வைத்துள்ளனர். இந்திய ஜனநாயகத்தில் ராகுல் ஒரு கரும்புள்ளி என்பதை நான் வருத்தத்துடன் சொல்லிக் கொள்கிறேன். வெளிநாட்டிற்கு சென்றால் என்ன பேசுவது என்பது கூட அவருக்கு தெரியாது. சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, வெளிநாடுகளில் தனது கருத்துக்களால் இந்திய ஜனநாயகத்தை பலவீனப்படுத்த ராகுல் முயற்சிக்கிறார். நான் கூறுவது பொய் என்றால், சீனாவுடனான ஒப்பந்தத்தை ராகுலும், கார்கேவும் பகிரங்கப்படுத்த தைரியம் இருக்கிறதா?’’ என்றார்.
இந்தியாவை ராகுல் ஒருபோதும் அவமதிக்கவில்லை கார்கே பதிலடி; ராகுல்காந்தி ஒருபோதும் இந்தியாவை அவமதிக்கவில்லை, அவர் அவ்வாறு செய்யவும் மாட்டார் என்று பா.ஜவுக்கு கார்கே பதிலடி கொடுத்துள்ளார். அமெரிக்கா சென்றுள்ள ராகுல்காந்தி அங்கு பேசியபோது இந்தியாவை அவமதித்துவிட்டதாக குற்றம் சாட்டிய பா.ஜவுக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே அளித்த பதிலில்,’ ராகுல்காந்தி ஒருபோதும் இந்தியாவை அவமதித்ததில்லை, அவ்வாறு செய்யமாட்டார். இது எங்கள் வாக்குறுதி. ஆனால் இதுபோன்ற பிரச்னைகளை எழுப்ப பாஜவுக்கு ஒரு சாக்கு தேவை’ என்றார்.
The post இந்திய ஜனநாயகத்தில் ராகுல் காந்தி கரும்புள்ளி: பாஜ கடும் தாக்கு appeared first on Dinakaran.