- காஷ்மீர்
- பருக் அப்துல்லா
- ஜம்மு மற்றும்
- தேசிய மாநாடு
- பாஜக
- 42 வது நினைவு நாள்
- ஷேக் முகம்மது அப
- நிறுவனர்
- தேசிய மாநாட்டுக் கட்சி
- தின மலர்
ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் உள்ள இந்து வாக்காளர்களிடம் போலியான அச்சத்தை உருவாக்கி அவர்களை மிரட்ட பாஜக விரும்புவதாக தேசிய மாநாட்டு தலைவர் பருக் அப்துல்லா குற்றம்சாட்டியுள்ளார். தேசிய மாநாட்டு கட்சியின் நிறுவனர் ஷேக் முகமது அப்துல்லாவின் 42வது நினைவு நாளை முன்னிட்டு நசீம் பாக்கில் உள்ள நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது இதனை தெரிவித்தார். இந்துக்களை அச்சுறுத்தும் வகையில் பாஜக உயர்மட்ட தலைவர்களின் பிரச்சாரங்கள் உள்ளதாகவும் பருக் அப்துல்லா சாடினார்.
ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சி ஆட்சிக்கு வந்தால் மீண்டும் தீவிரவாதம் தரை தூக்கும் என்றும் மக்களை தவறாக பாஜக வழி நடத்துவதாகவும் அவர் புகார் கூறினார். இந்துக்கள் அவர்களுக்கு வாக்களிப்பார்கள் என்று பாஜகவினர் நினைக்கின்றனர். ஆனால் இன்று இந்துக்கள் மாறிவிட்டார்கள் என்ற பருக் அப்துல்லா முதலில் பாஜகவினர் ராமரின் பெயரை கூறி இந்துக்களிடம் வாக்குகேட்டனர். இப்போதோ அவர்களை அச்சுறுத்த விரும்புவதாக கூறினார். அரசியல் அமைப்பு சட்ட பிரிவு 370வதை பாஜக ரத்து செய்துவிட்டது. ஆனால் தீவிரவாதம் முடிவுக்கு வந்துவிட்டதா என்று கேள்வி எழுப்பிய பருக் அப்துல்லா தீவிரவாதம் மீண்டும் தலை தூக்கிவிட்டது.
இவை அனைத்துக்கும் பாஜக தான் பொறுப்பு என்றார். அவர்கள் உருவாக்க நினைக்கும் பாரதத்திற்கு தாங்கள் எதிரானவர்கள் என்பதை அமித்ஷாவுக்கு நினைவு படுத்த விரும்புவதாக தெரிவித்த அவர் பாரதம், இந்துக்கள், முஸ்லீம்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள்,பவுத்தர்கள் என அனைவர்க்கும் பொதுவானது நாங்கள் ஊடுருவல் காரர்கள் இல்லை. நங்கள் யாருடைய மாங்கல்யத்தையும் பறிக்கவும் இல்லை என்று ஆவேசமாக கூறினார். இந்தியாவியுன் சுதந்திரத்திற்கு முஸ்லீம்களும் சரிசமமாக பங்காளித்துள்ளதாக தெரிவித்த பருக் அப்துல்லா தேசிய மாநாடு மற்றும் காங்கிரஸ் கட்சிகள் ஜம்மு காஷ்மீரின் மாநில அந்தஸ்தை திரும்ப பெறுவதை உறுதி செய்யும் என்று கூறினார்.
The post காஷ்மீர் இந்து வாக்காளர்களை பா.ஜ.க மிரட்டுவதாக புகார்; தீவிரவாதம் முடிவுக்கு வந்துவிட்டதா? என பருக் அப்துல்லா கேள்வி appeared first on Dinakaran.