- குரங்கு நோய் பரவல்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- அமைச்சர்
- மா. சூப்பர்மேன்
- சென்னை
- சுப்பிரமணியன்
- இந்தியா
- ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்ல
- C.L.பாய்ட் மேதா மருத்துவ கல்லூரி
- அமைச்சர் மா. சூப்பர்மேன்
சென்னை: தமிழ்நாட்டில் குரங்கம்மை பாதிப்பு யாருக்கும் கண்டறியப்படவில்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார். இந்தியாவிலேயே முதல் முறையாக ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் C.L.BAID METHA மருத்துவக் கல்லூரியுடன் இணைந்து மருந்து தகவல் மையம் அமைக்கப்பட்டு மற்றும் ரூ 4.50 கோடி மதிப்பீட்டில் புதிய மருத்துவ உபகரணங்கள், பல்வேறு மருத்துவ சேவைகள் மக்கள் பயன்பாட்டிற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.
பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது உலகளவில் 63 நாடுகளில் குரங்கு அம்மை நோயின் தாக்கம் அதிகமாக உள்ளது. நமது நாட்டில் கேரளா, தெலுங்கானா ஆகிய மாநிலத்தில் தலா ஒருவருக்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய பன்னாட்டு விமான நிலையங்களில் குரங்கு அம்மை பாதிப்பு உள்ள நாடுகளில் இருந்து வரும் வெளிநாட்டு பயணிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் குரங்கம்மை பாதிப்பு யாருக்கும் கண்டறியப்படவில்லை.
குரங்கம்மை அறிகுறியுடன் இந்தியா வந்தவரை தனிமைப்படுத்தி சிகிச்சை தருவதாக ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. எந்த நாட்டில் இருந்து வந்தார்? தற்போது எங்கே இருக்கிறார்? என்ற தகவல்களை ஒன்றிய அரசு ரகசியமாக வைத்துள்ளது. விமான நிலையங்களில் விழிப்புணர்வு பதாகைகள் மற்றும் டிஜிட்டல் போர்டுகள் வைக்கப்பட்டு உள்ளன.
கேரளாவில் குரங்கு அம்மை பாதிப்பு இருப்பதால், தமிழக- கேரள எல்லையில் உள்ள 13 சோதனை சாவடிகளிலும் கண் காணிப்பு தீவிரமாக நடந்து வருகிறது. குறிப்பாக பெரியவர்கள், குழந்தைகளுக்கு முகம் மற்றும் முழங்கைக்கு கீழ் பகுதியில் புதிதாக கொப்பளங்கள் உள்ளதா என்றும் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
குரங்கு அம்மை பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விமான நிலையங்களில் ஸ்லைடுகள் மற்றும் போஸ்டர்கள் திரையில் காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றன. நகர பகுதிகளில் பொது சுகாதாரத்துறை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.
The post தமிழ்நாட்டில் குரங்கம்மை பாதிப்பு இருக்கிறதா? – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் appeared first on Dinakaran.