- எடப்பாடி பழனிசாமி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- ஆதி திராவிட
- சென்னை
- அஇஅதிமுக
- பொதுச்செயலர்
- எடப்பாடி பழனிச்சாமி
- மயிலாப்பூர்
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட அறிக்கை: மயிலாப்பூரில் உள்ள ஆதி திராவிடர் மாணவர் விடுதியில் பல கல்லூரி மாணவர்கள் தங்கியுள்ளதாகவும், அங்குள்ள கழிவறைகள் சுகாதாரமின்றி, கதவுகள் உடைந்துள்ள நிலையில் காணப்படுவதாகவும், இரவு நேரங்களில் வெளியாட்கள் வளாகத்தில் மதுபானங்கள் அருந்துவதாகவும், அசைவ உணவு வழங்கப்படும் போது 3-ல் 1 பங்கு மாணவர்களே சாப்பிடக்கூடிய அளவில் உணவு வழங்கப்படுவதால், பல மாணவர்கள் சாப்பாடு இல்லாமல் பசியோடு இருக்கக்கூடிய சூழ்நிலை உள்ளதாகவும், புகார்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் மாணவர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். எனவே தமிழ்நாடு முழுவதும் சிறப்புக் குழு அமைத்து, ஆதிதிராவிட மாணவ, மாணவிகளின் விடுதிகளை போர்க்கால அடிப்படையில் உணவு, சுகாதாரம் மற்றும் அடிப்படை வசதிகளை சீர் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
The post தமிழகம் முழுவதும் சிறப்பு குழு அமைத்து ஆதிதிராவிட மாணவ விடுதியில் வசதியை சீர் செய்ய வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் appeared first on Dinakaran.