×

அரியானா தேர்தல் காங்.- ஆம் ஆத்மி கூட்டணி பேச்சு

புதுடெல்லி : அரியானா சட்டப்பேரவை தேர்தலுக்கான மனுதாக்கல் நடந்து வருகிறது. வரும் 12ம் தேதி மனுதாக்கல் செய்ய கடைசி நாள். இந்த நிலையில், காங்கிரஸ், ஆம்ஆத்மி இடையே தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஆம்ஆத்மி 10 தொகுதிகளை கேட்ட நிலையில், 7 தொகுதி தருவதாக காங்கிரஸ் உறுதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டு விட்டதாக நேற்று மாலை செய்தி வெளியானது. ஆனால், பேச்சு தொடர்ந்து நடந்து வருவதாகவும் இறுதி முடிவு இன்னமும் எட்டப்படவில்லை என்று ஆம்ஆத்மி வட்டாரங்கள் தெரிவித்தன.

The post அரியானா தேர்தல் காங்.- ஆம் ஆத்மி கூட்டணி பேச்சு appeared first on Dinakaran.

Tags : Ariana ,Cong. ,Aam Aadmi Alliance ,New Delhi ,Ariana Legislative Assembly ,Congress ,Aam Aadmi Party ,AAP ,Aryana ,Dinakaran ,
× RELATED டெல்லியில் மூடு பனி 470 விமானங்களின் வருகையில் தாமதம்