×
Saravana Stores

2வது முறையாக அதிபரானால் எதிரிகளை சிறையில் அடைப்பேன்: டிரம்ப் எச்சரிக்கை

வாஷிங்டன்: அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கு இரண்டு மாதங்கள் உள்ள நிலையில் அங்கு தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் முன்னாள் அதிபர் டிரம்பை எதிர்த்து, துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஜனநாயக கட்சி சார்பில் களமிறங்கியுள்ளார்.

அதிபர் தேர்தல் வேட்பாளர்களான டிரம்ப், கமலா ஹாரிஸ் ஆகிய இருவரும் நேருக்கு நேர் விவாதத்தில் நாளை ஈடுபட உள்ளனர். இதற்காக, கமலா ஹாரிஸ் பிட்ஸ்பர்க் நகர ஓட்டல் ஒன்றில் தங்கி தினமும் விவாதப் பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. டிரம்பும் அவரது ஆலோசகர்களுடன் தீவிர ஆலோசனைகளில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில், முன்னாள் அதிபர் டிரம்ப் சமூக வலைதள பக்கத்தில் பதிவிடுகையில், நான் மீண்டும் அதிபரானால்,நேர்மையற்ற முறையில் செயல்பட்டவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள். இதில், வழக்கறிஞர்கள் அரசியல் செயற்பாட்டாளர்கள், நன்கொடையாளர்கள், சட்டவிரோத வாக்காளர்கள், ஊழல் கறைபடிந்த தேர்தல் அதிகாரிகள் என அனைவருக்கும் சட்டத்தின்படி தண்டனை வழங்குவேன் என குறிப்பிட்டுள்ளார்.

The post 2வது முறையாக அதிபரானால் எதிரிகளை சிறையில் அடைப்பேன்: டிரம்ப் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Trump ,Washington ,United States ,Vice President ,Kamala Harris ,Democratic Party ,President Trump ,Republican Party ,
× RELATED கதை கட்டிய அமெரிக்க மீடியாக்கள்...