×

பிரசாரத்தை தொடங்கினார் வினேஷ் போகத்

சண்டிகர்: மல்யுத்த சம்மேளத்தின் முன்னாள் தலைவரும், பாஜ எம்பியுமான பிரஜ் பூஷண் சிங்குக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டை கண்டித்து பல்வேறு போராட்டங்களை நடத்திய வீராங்கனை வினேஷ் போகத், சமீபத்தில் நடந்த பாரீஸ் ஒலிம்பிக்சில் இறுதிப் போட்டி வரை முன்னேறி அதிக உடல் எடை காரணமாக பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார். இதைத் தொடர்ந்து காங்கிரசில் இணைந்த வினேஷ் போகத், அடுத்த மாதம் 5ம் தேதி நடக்க உள்ள அரியானா சட்டப்பேரவை தேர்தலில் ஜூலானா தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தனது தொகுதியில் வினேஷ் போகத் நேற்று முதல் முறையாக பிரசாரத்தை தொடங்கினார். அவருக்கு தொகுதி மக்கள், கட்சியினர் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது பேசிய போகத், ‘‘மக்களின் ஆசியால் மல்யுத்த களம், தேர்தல் களம் இரண்டிலும் வெற்றி பெறுவேன்’’ என்றார்.

The post பிரசாரத்தை தொடங்கினார் வினேஷ் போகத் appeared first on Dinakaran.

Tags : Vinesh Phogat ,Chandigarh ,Wrestling Federation ,BJP ,Praj Bhushan Singh ,Paris Olympics ,Dinakaran ,
× RELATED கூகுளில் அதிகம் தேடப்பட்ட இந்தியரில்...