- சட்டசபை
- திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு
- அமெரிக்கா
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- சென்னை
- திமுக
- மு.கே ஸ்டாலின்
- அமெரிக்கா
- 2026 சட்டப்பேரவைத் தேர்தல்கள்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சட்டமன்றத் தேர்தல்
- தின மலர்
சென்னை: திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவில் இருந்து காணொலி காட்சி வாயிலாக திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவுடன் நேற்றிரவு ஆலோசனை நடத்தினார். அப்போது 2026 சட்டப்பேரவை தேர்தல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்தார். தமிழகத்தில் 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் 5 பேர் கொண்ட திமுக ஒருங்கிணைப்பு குழுவை திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் அமைத்திருந்தார்.
இந்த குழுவில் திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். வரவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் திமுகவில் மேற்கொள்ள வேண்டிய மாறுதல்கள், அமைப்பு ரீதியான சீரமைப்புகளை செய்ய திமுக தலைமைக்கு பரிந்துரைப்பது, கட்சி நிர்வாகிகளிடம் இருந்து வரும் புகார்களை விசாரிப்பது உள்ளிட்ட பணிகளை இக்குழு மேற்கொள்ள அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி அமைப்பு ரீதியாக மாவட்டங்களில் உள்ள பிரச்னைகளை தீர்க்கும் வகையில், மாவட்டங்களை மேலும் பிரித்து புதிய மாவட்டச் செயலாளர்களை நியமிப்பது உள்ளிட்ட பணிகளை இக்குழு மேற்கொள்ள அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஒருங்கிணைப்பு குழு இதுவரை திமுக இளைஞரணி, மாணவரணி, மகளிர் அணி, வழக்கறிஞர் அணி, தொழிலாளர் அணி, இலக்கிய அணியுடன் ஆலோசனை நடத்தியுள்ளது. அப்போது அணியினர் தெரிவித்த கருத்துகளை கேட்டறிந்து அவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளையும் இக் குழு வழங்கியது.
இந்நிலையில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சென்றுள்ளார். வெளிநாடு சென்றாலும் ஆட்சியையும், கட்சி பணியையும் அங்கிருந்து கவனிப்பேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து இருந்தார். அதன்படி வெளிநாட்டில் இருந்தபடி ஆட்சியையும், கட்சி பணியையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தினமும் கவனித்து வருகிறார். முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று சான்பிரான்சிஸ்கோவில் உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் திமுக ஒருங்கிணைப்பு குழுவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் கே.என்.நேரு, ஆர்.எஸ்.பாரதி, ஏ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது குழுவின் செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். 2026 சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
அப்போது தேர்தலுக்கான வெற்றி வியூகம் குறித்தும் சில ஆலோசனைகளை வழங்கினார். அதுமட்டுமல்லாமல் மாவட்டந்தோறும் பொது உறுப்பினர்கள் கூட்டத்தை நடத்துமாறு மாவட்டச் செயலாளர்களுக்கு ஏற்கனவே உத்தரவிடப்பட்டிருந்தது. அந்த கூட்டம் எந்த அளவில் நடத்தப்பட்டுள்ளது என்பதையும் கேட்டறிந்தார். வருகிற 17ம் தேதி சென்னை நந்தனம் ஓய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற உள்ள திமுக முப்பெரும் விழா குறித்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தியது ஒருங்கிணைப்பு குழுவினரை மேலும் உற்சாகமடைய செய்தது.
The post திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவுடன் அமெரிக்காவில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை: 2026 சட்டப்பேரவை தேர்தல் வியூகம் குறித்து விவாதித்தார் appeared first on Dinakaran.