- மகா விஷ்ணு
- சென்னை
- மாநில தலைவர்
- தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டு சங்கம்
- தமிழக ஊனமுற்றோர் நலக்குழு
- ஆர். தங்கம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- அசோக்நகர் பெண்கள் அரசு உயர் மேல்நிலைப் பள்ளி
சென்னை: தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்க மாநிலத் தலைவரும், தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நலவாரிய உறுப்பினர் ரெ.தங்கம் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் திரைப்படங்களில் மாற்றுத்திறனாளிகள் சமூகத்தை கேவலப்படுத்துவதும், இழிவுப்படுத்துவதும் தொடர் கதையாகிவிட்டது.
இந்நிலையில் சென்னை அசோக்நகர் பெண்கள் அரசு மேல்நிலை பள்ளி நிர்வாகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற மாணவர்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் சொற்பொழிவு நிகழ்ச்சியில் பங்கேற்ற மூடநம்பிக்கை பேச்சாளர் மகாவிஷ்னு பள்ளி மாணவிகளுக்கிடையே தேவையற்ற கருத்துகளை பேசியதுடன் பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஆசிரியரை பார்த்து போன ஜென்மத்தில் பாவம் செய்ததன் காரணமாகவே இந்த பிறவியில் மாற்றுத்திறனாளிகளாக பிறக்கிறார்கள் என குதர்க்கத்தனமாக பேசியும்,
பாவம் காரணமாகவே பார்வை போய்விட்டது என பேசி ஒட்டுமொத்த மாற்றுத்திறனாளிகள் சமூகத்தையும் கேவலப்படுத்திய மகாவிஷ்ணு மீது கடும் நடவடிக்கை எடுக் கவேண்டும். தற்போது போலீசார் மகாவிஷ்ணுவை கைது செய்துள்ளனர். இது போன்ற சம்பவங்கள் இனிமேல் தமிழ்நாட்டில் நடக்காத வண்ணம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post மூடநம்பிக்கை பேச்சாளர் மகாவிஷ்ணு மீது கடும் நடவடிக்கை: மாற்றுத் திறனாளிகள் சங்கம் கோரிக்கை appeared first on Dinakaran.