புதுக்கோட்டை: உள்ளாட்சி தேர்தலாக இருந்தாலும் சட்டமன்ற தேர்தலாக இருந்தாலும் சரி சந்திக்க அதிமுக தயாராக உள்ளது என்று எடப்பாடி பழனிசாமி கூறினர் புதுக்கோட்டையில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் விராலிமலை சட்டமன்ற தொகுதியில் மருத்துவ படிப்பில் சேர்ந்த 5 மாணவர்களுக்கு பாராட்டு விழா முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஏற்பாட்டின் பேரில் புதுக்கோட்டையில் நேற்று நடைபெற்றது.
இதில் அ.தி.மு.க பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி பங்கேற்று மாணவர்களை பாராட்டி ஸ்டெதாஸ் கோப் மற்றும் இனிப்புகள் வழங்கி பாராட்டினார். பின்னர் எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டி: காவிரி, வைகைஇ குண்டாறு திட்டம் நிறைவேறினால் திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட 7 மாவட்ட விவசாயிகள் பயனடைவார்கள். வேலை வாய்ப்பு அதிகரிக்கும். நிலத்தடி நீ்ர் மட்டம் உயரும்.
உள்ளாட்சித் தேர்தலாக இருந்தாலும் சரி, சட்டமன்ற தேர்தலாக இருந்தாலும் சரி அ.தி.மு.க சந்திப்பதற்கு தயாராக உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 19 மாதங்கள் உள்ளது. தேர்தல் அறிவிப்பு வந்தவுடன்தான் கூட்டணிபற்றி தெரியும். இப்போது கூட்டணி அமைக்க முடியாது. இருந்தாலும் அதிமுக சார்பில் சிறந்த கூட்டணி அமைக்கப்படும். பாஜவுடன் கூட்டணி குறித்த கருத்தை ஏற்கனவே நான் தெளிவாக சொல்லி விட்டேன். இனி இந்த விவகாரத்தில் அரைத்த மாவையே அரைக்க வேண்டியதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
The post இப்போது கூட்டணி அமைக்க முடியாது உள்ளாட்சி தேர்தலை சந்திக்க அதிமுக தயார்: சொல்கிறார் எடப்பாடி பழனிசாமி appeared first on Dinakaran.