- தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணையம்
- ஐ.நா. சிறார் நீதி
- சென்னை
- சிறார் நீதிக்கான ஐக்கிய நாடுகளின் அமைப்பு
- தின மலர்
சென்னை: குழந்தை தொழிலாளர் கொத்தடிமை, சுரண்டல், ஆட்கடத்தல் ஆகியவற்றை தடுப்பது, விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பாக சிறப்பாக செயல்பட்ட தமிழ்நாடு சட்ட பணிகள் ஆணை குழுவுக்கு ஐக்கிய நாடுகளில் சிறுவர் நீதியத்திற்கான அமைப்பு விருது வழங்கியுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் ஐதராபாத்தில், தெலங்கானா காவல் துறையின் சார்பாக ஆட்கடத்தல் நிகழ்வுகளில் வளர்ந்து வரும் போக்குகள், அவற்றைத் தடுப்பதற்கான உத்திகள் தொடர்பான தேசிய அளவிலான தொழில் நுட்ப கலந்தாய்வு நடந்தது. இந்த கலந்தாய்வில் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உறுப்பினர் செயலர் நீதிபதி அ.நஷீர் அகமது கலந்துகொண்டு பேசினார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்ட பணிகள் ஆணை குழுவின் “ஒற்றை நிறுத்த குழு” குழந்தை தொழிலாளர்கள், கொத்தடிமைகள் மற்றும் ஆட்கடத்தலால் பாதிக்கப்பட்டோரை மீட்டெடுத்தல், அவர்களுக்கு பாதுகாப்பு, நிவாரணம் மற்றும் சட்ட உதவி வழங்கல் சார்ந்த சேவையை சிறப்பாக செய்துள்ளதை பாராட்டி தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவிற்கு விருது வழங்கப்பட்டது.
இந்த விருதை ஐக்கிய நாடுகளில் சிறுவர் நீதியத்திற்கான ஆந்திரபிரதேசம், கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களுக்கான தலைமை அதிகாரி ஜலாலீம் பீர்ஹானு டொபீஸ் வழங்கினார். விருதை சட்ட பணிகள் ஆணை குழுவின் உறுப்பினர் செயலர் நீதிபதி அ.நஷீர் அகமது பெற்றுக்கொண்டார். இந்த ஒற்றை நிறுத்த குழு என்பது குழந்தை தொழிலாளர் கொத்தடிமை, சுரண்டல், ஆட்கடத்தல் ஆகியவற்றை தடுப்பது, விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பாக அரசின் பல்வேறு துறை அதிகாரிகளையும் உறுப்பினர்களாகக் கொண்டு மாவட்ட வாரியாக சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உறுப்பினர் செயலரின் தலைமையில் இயங்கி வரும் அமைப்பாகும். இந்த குழுக்களின் செயல்பாடுகளின் ஒருங்கிணைந்த செயல்பாட்டை பாராட்டும் விதமாக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
The post குழந்தை தொழிலாளர், ஆள்கடத்தல் தொடர்பான விழிப்புணர்வில் சிறந்த பணி; தமிழ்நாடு சட்ட பணிகள் ஆணை குழுவுக்கு விருது: ஐ.நா சிறுவர் நீதியம் வழங்கியது appeared first on Dinakaran.