×

‘குங்குமம் – தோழி’ இதழின் ஷாப்பிங் திருவிழா; அதிரடி சலுகையால் அலைமோதும் கூட்டம்: அழகு சாதன பொருட்கள் வாங்க பெண்கள் ஆர்வம்


சென்னை: சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தினகரன், ‘குங்குமம் – தோழி’ இதழின் பிரமாண்டமான ஷாப்பிங் திருவிழாவில் அதிரடி சலுகையால் மக்கள் கூட்டம் அலைமோதி காணப்பட்டது. தினகரன், ‘குங்குமம் – தோழி’ இதழ் பெண்களுக்கான ஆரோக்கியம், சுய தொழில் வளர்ச்சி, சமூக முன்னேற்றம் போன்ற அக்கறையுடன் பல்வேறு சுவாரசிய தகவல்களுடன் வெளியாகி வருகின்றன. அந்தவகையில் பெண்களுக்கான அழகு சாதன பொருட்கள், ஹெல்த் கேர் பொருட்கள், மணப்பெண் உடைகள், பேஷன், நுகர்வோர் பொருட்கள், தங்கம் மற்றும் வைர நகைகள், கைவினை பொருட்கள், வீட்டு அலங்கார பொருட்கள், பர்னிச்சர்கள், ஊட்டச்சத்து பொருட்கள், ஆர்கானிக் பொருட்கள், மருத்துவம், விளையாட்டு உடைகள், ஸ்டேஷனரி பொருட்கள், எலக்ட்ரானிக் சாதனங்கள், ஆட்டோ மொபைல் மற்றும் ரியல்எஸ்டேட் என அனைத்து பெண்கள் சார்ந்த பொருட்கள் ஒரே இடத்தில் கிடைக்கும் வண்ணம் தினகரன் நாளிதழ், ‘குங்குமம் – தோழி’ இதழ் சார்பில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் மாபெரும் ஷாப்பிங் திருவிழாவை கடந்த 6ம் தேதி சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

இதில், கனரா வங்கி, லைப்லைன் மருத்துவமனை, யூனியன் பேங்க் ஆப் இந்தியா, பதஞ்சலி உள்ளிட்ட நிறுவனங்களின் முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த ஷாப்பிங் திருவிழா காலை 10.30 மணி முதல் இரவு 8 மணி வரை இலவசமாக பார்வையிட அனுமதிக்கப்படுவதால் தொடக்க நாளே ஏராளமானோர் கண்காட்சியை கண்டுகளித்து தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி சென்றதை காண முடிந்தது. இந்த ஷாப்பிங் திருவிழாவில் 100க்கும் மேற்பட்ட அரங்குகளில் பெண்கள் மற்றும் குழந்தைகளை கவரும் வகையில் விதவிதமான பொருட்கள் இடம்பெற்றுள்ளன. விநாயகர் சதுர்த்தி விடுமுறை என்பதால் நேற்று காலை முதலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பொருட்களை வாங்குவதற்காக அங்கு அமைக்கப்பட்ட கடைகளில் குவிந்தனர். சென்னை மற்றும் புறநகர் மட்டுமின்றி, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பெண்கள் அதிக அளவில் வந்திருந்தனர்.

மேலும், அங்கிருந்த நேரடி விற்பனை செய்யப்படும் காஞ்சிபுரம் பட்டு சேலைகள் அடங்கிய கடைகள், தங்கம் மற்றும் வைர நகைகள் கடைகள், கைவினை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், வீட்டு அலங்கார பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் கூட்டம் அலைமோதின. குறிப்பாக, இந்த கண்காட்சியில் சில கடைகளில் 40 முதல் 50 சதவீதம் வரை தள்ளுபடி விற்பனையும் செய்யப்படுவதால் அந்த பொருட்களை வாங்க மிகவும் ஆர்வம் காட்டினர். இதனால் விற்பனையாளர்கள் மட்டுமின்றி பொருட்களை வாங்கிய வாடிக்கையாளர்களும் மகிழ்ச்சியுடன் தொடர்ந்து ஷாப்பிங் செய்தனர். அதேபோல், இந்த கண்காட்சியில் விதவிதமான உணவுகள், இனிப்பு பண்டங்களும் விற்பனை செய்யப்படுகின்றன. தினகரன், ‘குங்குமம் – தோழி’ இதழின் பிரம்மாண்ட ஷாப்பிங் திருவிழா இன்றுடன் நிறைவு பெறுகிறது.

The post ‘குங்குமம் – தோழி’ இதழின் ஷாப்பிங் திருவிழா; அதிரடி சலுகையால் அலைமோதும் கூட்டம்: அழகு சாதன பொருட்கள் வாங்க பெண்கள் ஆர்வம் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Dhinakaran ,Nandambakkam Trade Center ,
× RELATED தமிழக மீனவர்களை மனிதநேயமற்ற முறையில்...