×
Saravana Stores

மருத்துவ சாதனங்களை விற்க மருத்துவர்களுக்கு வெளிநாட்டு சுற்றுலா, பரிசு வழங்க கூடாது: ஒன்றிய அரசு உத்தரவு


புதுடெல்லி: மருத்துவ சாதனங்களை விற்பதற்காக மருத்துவர்களையோ, அவர்களின் குடும்பத்தினரையோ வெளிநாட்டு சுற்றுலா அழைத்துச் செல்வது, பரிசுப் பொருட்கள் வழங்குவது போன்ற நெறிமுறையற்ற செயல்களில் நிறுவனங்கள் ஈடுபடக்கூடாது என ஒன்றிய அரசு கூறி உள்ளது. ஒன்றிய சுகாதார துறை அமைச்சகத்தின் மருந்துகள் துறை, மருந்துகள் சந்தைப்படுத்துதல் நடைமுறைக்கான பொது விதிமுறைகளை இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியிட்டது. இதுதொடர்பான அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது: அனைத்து மருத்துவ சாதனங்கள் சங்கங்களும், மருத்துவ சாதன விற்பனைக்கான நெறிமுறைக் குழுவை அமைக்க வேண்டும்.

அக்குழுவில் புகார் செய்வதற்கான விரிவான செயல்முறைகள் நிறுவனத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இவை மருந்து துறையின் யுசிபிஎம்பி இணையதளத்துடன் இணைக்கப்பட வேண்டும். மதிப்பீட்டு மாதிரிகள் விநியோகம் மற்றும் மாநாடுகள், கருத்தரங்குகள் போன்றவற்றில் ஏற்படும் செலவுகள் தொடர்பான விவரங்களை மருத்துவ சாதன நிறுவனங்கள் வெளியிட வேண்டும். ஒழுங்குமுறை ஆணையத்தால் தயாரிப்பு ஒப்புதலைப் பெறுவதற்கு முன்பாக மருத்துவ சாதனத்தை விளம்பரப்படுத்தக் கூடாது. பாதுகாப்பானது என்ற வார்த்தையை தகுதி இல்லாமல் பயன்படுத்தக்கூடாது.

மேலும் மருத்துவ சாதனத்தால் பாதகமான விளைவுகள் எதுவும் இல்லை என்று திட்டவட்டமாக கூறக்கூடாது. எந்தவொரு மருத்துவ சாதன நிறுவனமும் அதன் முகவரும் எந்தவொரு சுகாதார நிபுணர் அல்லது அவரது குடும்ப உறுப்பினரின் தனிப்பட்ட நலனுக்காக பணம், பரிசுப்பொருட்களை வழங்கவோ அல்லது அவர்களுக்கு வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலா அழைத்துச் செல்வதோ, வெளிநாடுகளில் கருத்தரங்குகளை ஏற்பாடு செய்து அதற்கான ஓட்டல் செலவுகளை நிறுவனங்களே ஏற்பதோ கூடாது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

The post மருத்துவ சாதனங்களை விற்க மருத்துவர்களுக்கு வெளிநாட்டு சுற்றுலா, பரிசு வழங்க கூடாது: ஒன்றிய அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Union Govt. ,NEW DELHI ,Union government ,Department of Medicines of the Union Health Ministry ,
× RELATED உச்ச நீதிமன்றத்தில் வழக்கு; மதுக்கடை,...