×

பொன்னமராவதி அருகே மணப்பட்டி சின்னம்மன் கோயில் கும்பாபிஷேகம்

 

பொன்னமராவதி,செப்.6: பொன்னமராவதி அருகே உள்ள தூத்தூர் ஊராட்சி மணப்பட்டி சின்னம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது. மணப்பட்டி கிராமத்தில் குலாலர்களுக்கு சொந்தமான சின்னம்மன் கோயில் கட்டப்பட்டு இதற்கான கும்பாபிசேம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு நேற்று முன்தினம் கோயில் முன்பு யாகசாலை அமைக்கப்பட்டு யாகசாலை பூஜை நடைபெற்றது. இதனை தொடர்ந்து நேற்று காலை கும்பத்தில் புனித நீர் ஊற்றி சிவாச்சாரியார்கள் கும்பாபிசேகத்தினை நடத்தினர். இதில் மணப்பட்டி, தூத்தூர், கண்டியாநத்தம், ஆலவயல்,பொன்னமராவதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் கலந்துகொண்டனர். பொன்னமராவதி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

 

The post பொன்னமராவதி அருகே மணப்பட்டி சின்னம்மன் கோயில் கும்பாபிஷேகம் appeared first on Dinakaran.

Tags : Manapatti Chinnamman Temple Kumbabhishekam ,Ponnamaravathi ,Ponnamaravati ,Chinnamman Temple Kumbabhishek ceremony ,Manapatti Chinnamman temple ,Thoothoor Panchayat ,Chinnamman temple ,Kulalars ,Manapatti ,Chinnamman ,Temple ,Kumbabhishekam ,
× RELATED பொன்னமராவதியில் எச்.ராஜா மீது காங்கிரஸ் கட்சியினர் போலீசில் புகார்