×

சர் ஐசக் நியூட்டன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாம் ஆண்டு துவக்க விழா

 

நாகப்பட்டினம்,செப்.6: சர் ஐசக் நியூட்டன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 15வது முதலாம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது. இவ்விழாவில் கல்லூரி துணை முதல்வர் ப.மலைசெல்வராஜா, வரவேற்றார். கல்லூரியின் தாளாளர் முனைவர் த.ஆனந்த் தலைமை விருந்தினராக விழாவில் கலந்து கொண்டார். மேலும் அவர் பேசுகையில், மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் மற்றும் ஈர்க்கக்கூடிய பேச்சு மூலம் வளரும் பொறியாளர்களை ஊக்கப்படுத்தினார்.

கல்லூரியின் முதல்வர் முனைவர் அ.குமாரவடிவேல், நிறுவனத்தின் வரலாறு மற்றும் சாதனைகளை நேர்த்தியாக விளக்கினார். கல்லூரியின் கல்வி ஒருங்கிணைப்பாளர் கே.இளங்கோவன், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். கல்லூரியின் முன்னாள் மற்றும் இந்நாள் மாணவர்கள் கல்லூரியில் கல்வி கற்பித்தல் முறை, பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு வழங்குதல், விளையாட்டு போன்றவற்றை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர். இறுதியில், அறிவியல் மற்றும் மனிதவள மேம்பாட்டு துறைத் தலைவர் ஜெ.சிவசங்கரி நன்றி கூறினார். இவ்விழாவில் அனைத்து துறை பேராசிரியர்களும் கலந்து கொண்டனர்.

The post சர் ஐசக் நியூட்டன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாம் ஆண்டு துவக்க விழா appeared first on Dinakaran.

Tags : First Year ,Ceremony ,Sir Isaac Newton College of Engineering and Technology ,Nagapattinam ,Isaac Newton College of Engineering and Technology ,College Vice Principal ,P. Malaiselvaraja ,Dr. ,Anand ,Sir ,First Year Commencement Ceremony ,Dinakaran ,
× RELATED முதலாம் ஆண்டு வகுப்பு தொடக்க விழா