×
Saravana Stores

மாநில கல்வி நிலை குறித்து ஆளுநர் மீண்டும் சர்ச்சை பேச்சு

சென்னை: கடந்த வாரம் சென்னையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றின் விழாவில் பங்கேற்று பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, மாநில பாடத்திட்டம், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை விட தரம் குறைவாக உள்ளது என்று பேசி சர்ச்சையை கிளப்பினார். இது தற்போது பற்றி எரிந்து கொண்டுள்ள நிலையில் மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்தை ஆசிரியர் தின விழாவில் ஆளுநர் தெரிவித்துள்ளார். ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆசிரியர்கள் கல்வியாளர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி ஆளுநர் மாளிகையில் நேற்று நடந்தது. அப்போது ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது: பள்ளி மாணவர்கள் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளனர். அரசுப் பள்ளிகளில் தரம் குறைந்து கொண்டு வருகிறது. இங்கு படிக்கின்ற மாணவர்களில் இரண்டாம் வகுப்பு அளவில் 70 சதவீதம் மாணவர்களால் இரண்டு இலக்க எண்களை அடையாளம் கண்டு சொல்ல இயலாத நிலையில் இருக்கின்றனர். இவ்வாறு பேசினார். ஆளுநரின் இந்த பேச்சு மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

The post மாநில கல்வி நிலை குறித்து ஆளுநர் மீண்டும் சர்ச்சை பேச்சு appeared first on Dinakaran.

Tags : governor ,CHENNAI ,Governor RN Ravi ,CBSE ,Dinakaran ,
× RELATED தொடர் மழை; சென்னை மாவட்டத்தில்...