×

அஜித் பிறந்தநாளில் 62வது படத்தின் அறிவிப்பு.! தீபாவளிக்கு வெளியிட திட்டம்

துணிவு படத்திற்கு பிறகு அஜித்தின் அடுத்த படத்தை இயக்குனர் மகிழ்திருமேனி இயக்குகிறார். இந்த படத்திற்கான கதை தேர்வு பல குளறுபடிக்குப் பிறகு தற்போது தான் ஒரு தீர்வுக்கு வந்துள்ளது. இதனால் ஏகே 62 படத்தின் சரியான அறிவிப்பு ஜனவரி மாதம் தொடங்கி இன்று வரை வெளிவரவில்லை. இதனால் அஜித் சென்டிமென்ட் ஆக மே மாதத்தை குறி வைத்து இருக்கிறார்.

அஜித்தின் ஏகே 62 படத்திற்கான முக்கிய அறிவிப்பு மே 1 தினமான தொழிலாளர் தினத்தில் வெளி வருகிறது. அதேபோல் மே நான்காம் தேதி வியாழக்கிழமை அஜித்தின் சென்டிமென்ட் முக்கிய நாளான அன்று படப்பிடிப்பை தொடங்க முடிவு செய்துள்ளார். அதிலிருந்து தொடர்ந்து மூன்று கட்டமாக படப்பிடிப்பு நடைபெற்ற முடிய போகிறது. எப்படியாவது இந்த தீபாவளிக்கு வெளியிட வேண்டும் என்று அஜித் முடிவு செய்திருக்கிறார். இந்த திடீர் முடிவால் ஏற்கனவே தீபாவளிக்கு வெளிவர இருக்கும் முக்கிய படங்கள் பதட்டத்தில் உள்ளன.

தீபாவளிக்கு தளபதி விஜய்யின் லியோ, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர், உலக நாயகன் கமலஹாசனின் இந்தியன் 2 போன்ற பெரிய பெரிய ஜாம்பவான்களின் படங்கள் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்த்து மற்ற படங்கள் வராமல் இருந்தன. இவர்கள் வேறு தேதியில் அறிவித்ததால், மற்ற ஹீரோக்களின் படம் தீபாவளிக்கு வெளியிட முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஏனென்றால் ஏகே 62 படத்தில் அஜித் முடிவு தான் கடைசி முடிவு. நிச்சயம் அந்த முடிவில் தீபாவளி பண்டிகைக்கு ஏகே 62 படம் வெளிவருமா இல்லையா என்பது தெரிந்துவிடும்.

The post அஜித் பிறந்தநாளில் 62வது படத்தின் அறிவிப்பு.! தீபாவளிக்கு வெளியிட திட்டம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Ajith ,Thadhavu ,Majidhirumeni ,Diwali ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED தனது ஜனநாயக கடமையை ஆற்ற முதல் ஆளாக வருகை தந்த நடிகர் அஜித்!